டிவிட்டர் தளம் பல பரிமானங்களில் விரிவாக்கம் அடைந்தும், மேம்பட்டு வரும் வேளையில் முன்னணி சமூகவலைத்தளங்களில் அளிக்கும் அனைத்து சேவைகளையும் டிவிட்டரில் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார்.
இதன் ஒருபகுதியாக வெறும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே பதிவிட்டு வந்த இடத்தில் இப்போது வீடியோ-வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்சியாக டிவிட்டர் தளத்தில் தற்போது லைவ் வீடியோ சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது.

டிவிட்டரில் இதுவரையில் லைவ் வீடியோ இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து யூசர்களும் லைவ் வீடியோ பதிவு செய்யும் சேவையை கொண்டு வந்துள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் இருக்கும் லைவ் வீடியோ போலவே டிவிட்டரும் லைவ் வீடியோ சேவையை பல்வேறு மேம்பாடுகள் உடன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட லைவ் வீடியோ சேவை ஐஓஎஸ் தளத்தில் மட்டுமே கிடைக்கும் வேளையில், இதை மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும் என எலான் மஸ்க் குட்டி வீடியோ உடன் அறிமுகம் செய்துள்ளார். அறிமுகம் செய்த வேகத்தில் அமெரிக்காவில் பலர் இந்த சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

டிவிட்டரில் லைவ் வீடியோ உருவாக்குவது எப்படி..?
படி 1: முதலில் கம்போஸ் பட்டனை தட்டி கேமரா ஆஃப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
படி 2: இதன் படி வலதுபக்கம் இருக்கும் லைவ் பட்டனை தட்ட வேண்டும்.
படி 3: டிஸ்கிரிப்ஷன் கொடுக்க வேண்டுமாயின் கொடுக்கலாம்.
படி 4: லைவ் பட்டனை தட்டினால் போதும். லைவ் வீடியோ ரெடி.
படி 5: லைவ் வீடியோ-வை முடிக்க ஸ்டாப் பட்டனை தட்டினால் போதும்.
இந்த லைவ் வீடியோ சர்ச் செய்து பார்க்க முடியும் என்பதால் டிஸ்கிரிப்ஷன் மிகவும் முக்கியமாக உள்ளது. மேலும் லைவ் வீடியோக்களை மக்கள் தங்களுடைய டைம்லைன், நோட்டிபிகேஷன், சர்ச் மற்றும் டிரென்ட்ஸ் ஆகியவற்றில் வரும் என்பதால் செலிப்ரிட்டிகள், influencer-களுக்கு பெரிய அளவில் உதவும்.


Click it and Unblock the Notifications