அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்-க்கு 250 மில்லியன் டாலர் நிதியுதவி செய்தது மட்டும் அல்லாமல் டிவிட்டரை டிரம்ப்-க்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்குப் பிரச்சார பீரங்கியாக மாற்றினார் எலான் மஸ்க். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டிரம்ப் எலான் மஸ்க்கிற்கு DOGE அமைப்பின் தலைமை பொறுப்பு வழங்கியுள்ளார்.
இந்த டோஜ் அமைப்பு அரசு அமைப்பு இல்லை, அரசு நிர்வாகத்திற்கு வெளியில் இயங்கும் ஒரு திங்க் டேங்க் அமைப்பு போன்றது. அதேவேளையில் அரசுடனும், அரசு அதிகாரிகளுடனும் நெருக்கமாக ஒன்றிணைந்து இயங்கும் ஒரு அமைப்பாகும். இதனால் வெள்ளை மாளிகையில் டோஜ் அமைப்புக்கும், எலான் மஸ்க்கிற்கும் அலுவலகம் அளிக்கப்பட்டு உள்ளது.

டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க அரசின் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 'அரசாங்க செயல்திறன் துறை'யை (Department of Government Efficiency - DOGE) தலைமையேற்று நடத்தும் எலான் மஸ்க், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் தனக்கென ஒரு அலுவலகத்தைப் பெற உள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே அமைந்துள்ள ஐசன்ஹவர் நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் (Eisenhower Executive Office Building) எலான் மஸ்க் அலுவலக இடத்தைப் பயன்படுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அதிபராகும் டிரம்ப் உடன் சிறந்த நட்பைக் கொண்டிருக்கும் எலான் மஸ்க் கடந்த 3 மாத காலத்தில் அவரது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறியுள்ளார். இந்த நிலையில் அவர் அதிபரான பின்பும் இந்த அலுவலகம் மூலம் நெருக்கமான தொடர்பு கிடைக்கும்.
இதுமட்டும் அல்லாமல் அரசாங்க ஒப்பந்தங்களில் கணிசமான அளவு கொண்டிருக்கும் எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பை உருவாக்க இந்த அலுவலகம் முக்கிய வாய்ப்பாக இருக்கும்.
கடந்த 5 மாதமாக எலான் மஸ்க் பல முறை டிரம்ப்-ன் Mar-a-Lago ரெசார்ட்டில் பல முறையைப் பயன்படுத்தியுள்ளார். சில முறை தனிப்பட்ட விஷயங்களுக்காகவும், பல முறை அரசியல், அலுவலக ரீதியாகவும் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நீட்சியாக ஐசன்ஹவர் கட்டிடத்தில் அலுவலகத்தைப் பெற்று டிரம்ப்-க்கு தொடர்ந்து நெருக்கமாகவே இருக்கப்போகிறார் மஸ்க்.
எலான் மஸ்க் வெஸ்ட் விங் (West Wing) வரை செல்ல அனுமதிக்கப்படுவாரா மற்றும் புதிய டிரம்ப் நிர்வாகத்தில் அவர் என்ன பங்கை வகிப்பார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், அவர் வெள்ளை மாளிகையுடன் நெருக்கமான தொடர்பைப் பெற இந்த டோஜ் அலுவலகம் போது. தற்போது DOGE அலுவலகம் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து இயங்கி வருகிறது.
DOGE அமைப்பை எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராம்சவாமி தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பாகும். இந்த நிலையில் விவேக் ராம்சவாமி-க்கு வெள்ளை மாளிகை வளாகத்தில் அலுவலக இடம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications