உலகளவில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் போட்டியில் இருக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு போட்டியாக எலான் மஸ்க் புதிதாக ஒரு சாட் பாட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ் ஏஐ என்ற பெயரில் எலான் மஸ்க் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நிறுவி இருக்கிறார். உலக அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் சாட்ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. அதற்கு போட்டியாக தான் எலான் மஸ்க் எக்ஸ் ஏஐ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக எக்ஸ் ஏஐ இருக்கும் என எலான் மஸ்க் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் இதனை உலகிற்கு அறிமுகம் செய்ய போவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக எலான் மஸ்க் டென்னிசி பகுதியில் மிகப்பெரிய ஒரு டேட்டா மையத்தை நிறுவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் என்விடியா நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் கிராஃபிக் ப்ராசசிங் யூனிட்டுகளை அவர் கையகப்படுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சாட் ஜிபிடி நிறுவனத்தில் தொடக்க காலத்தில் எலான் மஸ்க்கும் ஒரு நிறுவனராக செயல்பட்டு வந்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு அவர் இந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுவர நினைத்தபோது பிரச்சனை ஏற்பட்டது எனவே அவர் ஓபன் நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
இதன் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய அவர் அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். தொடர்ந்து தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் அவர் எக்ஸ் ஏஐ என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கி சாட் பாட் உள்ளிட்டவற்றை உருவாக்கி வருகிறார்.
தற்போதைக்கு எலான் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய கிராக் என்ற சாட் பாட் எக்ஸ் தளத்தில் சப்ஸ்கிரைப் செய்திருக்கும் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் சாட் ஜிபிடி போல உலகம் முழுவதும் இருப்பவர்கள் அணுகக் கூடிய வகையில் இந்த சாட் பாட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
எக்ஸ் ஏஐ ஆண்டு தோறும் 100 மில்லியன் டாலர்கள் வருமானத்தை ஈட்டும் நிறுவனமாக மாறும் என எலான் மஸ்க் தரப்பில் முதலீட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம். தற்போது இந்த போட்டியில் முதலிடத்தில் இருக்கும் சாட் ஜிபிடி நடப்பாண்டில் மட்டும் 4 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தான் எக்ஸ் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கினார். அப்போது இந்த நிறுவனத்தின் நோக்கம் பிரபஞ்சத்தின் உண்மை தன்மையை புரிந்து கொள்வது என அவர் குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications