எலான் மஸ்க் வியாழக்கிழமை தனது ட்விட்டர் கணக்கில் டிவிட்டர் அல்லது x.com நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான பராக் அகர்வால்-ஐ கிண்டல் செய்யும் விதமாக அவர் வளர்க்கும் நாயை சிஇஓ-வாக நியமித்தார்.
எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் யார் அந்த புதிய சிஇஓ என பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் ஒரு பெண் என்றும், இன்னும் ஆறு வாரங்களில் சிஇஓ பதிவியேற்று பணியை தொடங்குவார் என்றும் தெரிவித்து இருந்தார்.

கடந்த வருடம் டிவிட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு மொத்தமாக வாங்கிய எலான் மஸ்க், முதல் நாளில் இருந்தே பல அதிரடியான முடிவுகளை எடுத்தார். டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் எலான் மஸ்க் கையில் வைத்திருந்தாலும், அதன் நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி அல்ல என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதற்கு ஏற்றார் போல் எலான் மஸ்க் தற்போது புதிய சிஇஓ-வை, அவருடைய பணி விவேகத்திற்கு ஈடுக்கொடுக்கும் ஒரு பெண் தலைவரையும் தேர்வு செய்ய உள்ளார். இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர், டெஸ்லா முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-ஐ டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய நாளில் இருந்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் வேளையில் தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.
உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வியாழக்கிழமை ட்விட்டரின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்தாலும், முழுமையாக டிவிட்டரை விட்டு வெளியேற போவது இல்லை.. இங்க தான் புதிய டிவிஸ்ட் இருக்கு..
சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளதாக மஸ்க் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கூறி வருகிறார். இதுக்குறித்து டெலவேர் நீதிமன்றத்தில் அவர் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்.

டிசம்பர் மாதம் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதிவியை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டால், நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன் என டிவீட் செய்தார். அப்போ யார் அந்த முட்டாள்..


Click it and Unblock the Notifications