அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை வாங்கிக் குவிக்கும் பணிகளில் எலான் மஸ்க் மற்றும் அவரது நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எலான் மஸ்க் தனது பெயரில் சொந்தமாக நகரம் ஒன்றை உருவாக்க நினைப்பதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தனக்கு சொந்தமாக டவுன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இந்த நகருக்கு "ஸ்னைல்புரூக்" (Snailbrook) என்று பெயர்சூட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்னைல்புரூக் என்பது எலான் மஸ்க்-இன் சுரங்க நிறுவனத்தின் அதிர்ஷ்ட உருவத்தை குறிக்கும். இவ்வாறு தன் பெயரில் நகரத்தை உருவாக்கும் முதல் நபர் இவரோ அல்லது இவர் மட்டுமே என எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பெரும் தொழிலதிபர்கள்
நிலங்களின் ஒட்டுமொத்த உரிமையாளராக எலான் மஸ்க் மாறிய பின், அதற்கான மொத்த உரிமையாளராக மாற நினைக்கும் முதல் நபர் இவர் இல்லை. அந்த வகையில் தனக்கென சொந்தமாக டவுன்களை வைத்திருக்கும் அல்லது தங்களின் பெயர் டவுனிற்கு சூட்டப்பட்டு இருக்கும் ஐந்து பெரும் தொழிலதிபர்கள் உள்ளனர்.
ஜாம்சேட்ஜி நசர்வாஞ்சி டாடா
ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் எனும் இடத்திற்கு இந்திய தொழிலதிபர் ஜாம்சேட்ஜி நசர்வாஞ்சி டாடா பெயரை தழுவி பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 1919 வாக்கில் இந்த நகரை உருவாக்கி வரும், டாடா நிறுவனத்தின் நிறுவனராகவும் ஜாம்சேட்ஜி நசர்வாஞ்சி டாடா இருக்கிறார்.
ஜாம்சேட்ஜி நசர்வாஞ்சி டாடா இந்திய தொழில்துறையின் தந்தை என அறியப்படுகிறார். உலக அரங்கில் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார். இதன் காரணமாகவே முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு டாடா-வை ஒருமுறை ஒன்-மேன் திட்ட கமிஷன் என குறிப்பிட்டுள்ளார்.
1868 ஆம் ஆண்டு டாடா குழுமம் துவங்குவதிற்கு வித்திட்ட ஜாம்சேட்ஜி நசர்வாஞ்சி டாடா தொலை நோக்கு பார்வை கொண்டவர் என்பதோடு, தொழிற்துறையில் முன்னோடியாகவும் இருந்தார். 1904 ஆம் ஆண்டு தான் மரணிக்கும் வரை டாடா குழுமத்தின் தலைவராக ஜாம்சேட்ஜி நசர்வாஞ்சி டாடா விளங்கினார். இவர் 1892 ஆம் ஆண்டு தனது ஊழியர்கள் நலனுக்காக ஜெ.என். டாடா எண்டோமெண்ட்-ஐ துவங்கினார். இதோடு 1903 ஆண்டில் தாஜ் மகால் ஓட்டலை நிறுவினார்.
லெஸ் வெக்ஸ்னர் (Les Wexner)
Bath & Body Works நிறுவனத்தின் உரிமையாளரும் கோடீஸ்வரருமான லெஸ் வெக்ஸ்னர் அமெரிக்காவில் ஓஹியோ பகுதியில் நியூ அல்பானி எனும் சிறு நகரத்தை கொலம்பஸ்-க்கு வெளியே உருவாக்கினார்.
1980 வாக்கில் நியூ அல்பானிக்கு சென்ற வெக்ஸ்னர் தனது வீட்டை கட்டுவதற்கான இடத்தை தேட டிரைவிங் சென்றார். முதலில் 30 ஏக்கர்களாக நிலப்பரப்பை வாங்க துவங்கிய இவர், கொஞ்சம் கொஞ்சமாக 10 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர்களுடன் ஒட்டுமொத்த டவுன் மற்றும் அதன் சுற்றுபுறத்தையும் வாங்கினார்.
தனது நகரை அழகாக உருவாக்க கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் இயற்கை அழகுப்படுத்துபவர் ஆகியோருடன் ஒவ்வொரு சனிக்கிழமை காலை வேளையை கழித்ததாக இவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இன்று நியூ அல்பானியில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 2 லட்சத்திற்கும் அதிக டாலர்கள் வருமானமாக கிடைக்கிறது. இது ஒட்டுமொத்த அமெரிக்க வருமானத்தை விட மும்மடங்கு அதிகம் ஆகும்.
இங்கு செங்கற்களால் கட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஜார்ஜியன் வீடுகளும் ஒரே மாதிரி காட்சியளிக்கும். இங்குள்ள தெரு விளக்குகள் அனைத்தும் மார்தா வைன்யார்டில் கைகளாலேயே உருவாக்கப்பட்டவை ஆகும். வெக்ஸ்னர் இன்றும் இங்கேயே வசிக்கிறார். இலர் வசிக்கும் மேன்சன் 60 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது.
லேரி எலிசன்
2012 ஆம் ஆண்டு ஆரக்கிள் கார்ப் இணை நிறுவனர் லேரி எலிசன் ஹவாய் தீவை சேர்ந்த லனாய் எனும் பகுதியில் 98 சதவீத நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார். இங்கு சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஒரே இரவில் இவர் அனைத்து வீடுகளின் உரிமையாளர் ஆகிவிட்டார்.
இந்த தீவின் பொருளாதாரத்தை ஈட்டித் தரும் ஓட்டல்கள் அனைத்தையும் எலிசன் புதுப்பித்து, முற்றிலும் புதிய ரெசார்ட் உடன் கூடிய வெல்னஸ் நிறுவனம் ஒன்றை துவங்கிவிட்டார். தனது சொந்த பயன்பாட்டிற்காக இவர் ஐந்து வீடுகள் கொண்ட காம்ப்ளக்ஸ்-ஐ கட்டி வருகிறார்.
லேரி எலிசன் ஹவாய் தீவை வாங்கியதில் இருந்து, தீவில் வசிப்பதற்கான கட்டணம் பலமடங்கு அதிகரித்துவிட்டதால், பல தலைமுறைகளாக இங்கு வசித்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ராய் பகதூர் குஜர் மால் மோடி
உத்திர பிரதேச மாநிலத்தின் மோடிநகர் எனும் பகுதிக்கு ராய் பகதூர் குஜர் மால் மோடியின் பெயரை தழுவி சூட்டப்பட்டு இருக்கிறது. இவர் தான் 1933 ஆம் ஆண்டு இந்த பகுதியை கண்டறிந்து, இப்பகுதியில் மோடி குழும நிறுவனங்களையும் நிறுவினார்.
1930-க்களில் ஆங்கிலேயர்களால் "டர்டி இந்தியன்" என்று அழைக்கப்பட்ட இவர், குஜர்மால் மோடி 1933 ஆண்டில் மோடிநகரில் மோடி குழும நிறுவனங்களை இணைந்து துவங்க முக்கிய காரணமாக விளங்கினார்.
ப்ரூனெல்லோ குகுனெல்லி
இத்தாலியை சேர்ந்த ஆடம்பர செல்வந்தர் ப்ரூனெல்லோ குகுனெல்லி (Brunello Cucinelli) சோலோமியோ பகுதியில் அதிக மரியாதை மிக்க மனிதராக விளங்கி வந்தார். இந்த பகுதி அம்ப்ரியன் கிராமத்தில் உள்ளது. இங்கு தான் இவரின் ஆடை நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருந்தது. 1987 வாக்கில் இந்த நகரின் medieval கோட்டையை குகுனெல்லி விலைக்கு வாங்கிய போது, இந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
இவர் தனது தலைமையகத்தை அங்கு மாற்றிக் கொண்டு, 12 ஆவது நூற்றாண்டு கட்டிடங்களை விலைக்கு வாங்கி, அவற்றை புணரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த இடத்தில் இன்று கார்ப்பரேட் வளாகம், பள்ளி, திறந்த-வெளி அரங்கம், நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications