அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்க அரசின் திறன் துறை அமைப்பான DOGE-யின் இணைத்தலைவர் பதவியில் இருந்து, இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகியதையடுத்து, எலான் மஸ்க் DOGE நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
இந்தநிலையில், புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE)-ஐ பாராட்டி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், DOGE ஊழியர்கள் வாரத்திற்கு 120 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு 17 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள் என்று தெரிவித்தார். தனது விமர்சகர்களை கடுமையாக சாடிய அவர், "DOGE வாரத்திற்கு 120 மணிநேரம் வேலை செய்கிறது. ஆனால் நமது எதிரிகள் வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அவர்களை முன்னேறி செல்வதற்காக வேலை நேரத்தை அதிகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, முந்தைய அதிகாரிகள், ஊழியர்கள் செய்த பாரிய வீண் செலவு, வரி செலுத்துவோர் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோசடிகளை, இந்த நிறுவனத்தை வாங்கிய 2 வாரங்களிலேயே கண்டுபிடித்துள்ளோம். எனவே, பல தசாப்த கால ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக 2022 இல் ட்விட்டரை வாங்கிய பின்னர் (இப்போது X) வாரத்திற்கு 80 மணிநேர வேலை நேரத்தை கட்டாயமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, "இந்தியா உலக அரங்கில் போட்டி போட வேண்டுமானால், நமது இளைஞர் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்; அவர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தொழிற்சங்கம், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அவரது கருத்தில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து இதனையே வலிறுத்தி வருகிறார்.
இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன் தனது நிறுவன ஊழியர்களுடன் உரையாடிய எஸ்.என்.சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை பார்க்க வைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவியின் முகத்தை உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கள் வைரலாகி, சர்ச்சையை கிளப்பியது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ்-ன் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களையும் வாரத்திற்கு 70 மணி நேர வேலை செய்ய வேண்டும் என பேசியது இப்போது வரையில் டிரெண்டிங் ஆக உள்ளது. இருப்பினும் வாரத்திற்கு ஆறு நாட்கள் கிட்டத்தட்ட 12 மணி நேர வேலை நாட்கள் என்ற யோசனை விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்தநிலையில், DOGE ஊழியர்கள் வாரத்திற்கு 120 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்ற எலான் மஸ்க் தெரிவித்துள்ளது ஆன்லைனில் கலவையான விமர்சனைங்களை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications