கூகுள் இணை நிறுவனர் செர்கி பிரின் முன்னாள் மனைவியும், தற்போது அமெரிக்க அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் துணை ஜனாதிபதித் தேர்வாளருமான நிக்கோல் ஷனஹான், 2021 ஆம் ஆண்டு எலான் மஸ்க் உடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று நியூயார்க் டைம்ஸ் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. ஷனஹான் கடந்த ஆண்டு செர்கி பிரின் உடனான விவாகரத்தின் மூலம் $1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜீவனாம்சம் பெற்றார்.
இவர்களது விவாகரத்து முடிந்த பின்பு இதுகுறித்த பேசு அடங்கியது, ஆனால் நியூயார்க் டைம்ஸ் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்து தகவல் சேகரித்த நிலையில் தற்போது "A Running Mate’s History: $1 Billion, Cocaine, a Fling With Elon Musk," என்ற தலைப்பில் நிக்கோல் ஷானஹான் மற்றும் எலோன் மஸ்க் இடையே இருந்த உறவை பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

நிக்கோல் ஷானஹான் மற்றும் எலோன் மஸ்க் இருவரும் இவர்கள் மத்தியிலான உறவை மறுத்துள்ளனர், ஆனால் உண்மை கதை வேறாக உள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எலான் மஸ்க்-ம் கூகுள் இணை நிறுவனர் செர்கி பிரின்-ம் நெருங்கிய நண்பர்கள். எலான் மஸ்க்-ன் செயல் அவரது நண்பர் செர்கி பிரின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது.
38 வயதான வழக்கறிஞரான நிக்கோல் ஷானஹான் 2018 இல் கூகுள் இணை நிறுவனர் செர்கி பிரின்-ஐ மணந்தார். அவர்களது ஐந்தாண்டு திருமணத்தில், செர்கி பிரின் மூலம் நிக்கோல் ஷானஹான் சிலிக்கான் வேலி சமூகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதன் வாயிலாகத் தான் எலான் மஸ்க்-ன் அறிமுகம் நிக்கோல் ஷானஹான்-க்கு கிடைத்தது.

செர்கி பிரின் - நிக்கோல் ஷானஹான் ஐந்தாண்டு திருமணத்தில் பல உயர்மட்ட டெக் தலைவர்கள் நடத்திய பார்ட்டியில் கலந்துக்கொண்ட நிக்கோல் கெட்டமைன், கோகோயின் மற்றும் சைகடெலிக் காளான்கள் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார் என எட்டு பேர் மற்றும் ஆவணங்களை தி நியூயார்க் டைம்ஸ் மதிப்பாய்வு செய்தது தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இப்படி ஒரு பார்ட்டியின் போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் நிக்கோல் ஷானஹான் கெட்டமைன் எடுத்துக் கொண்டதாகவும் இவர்களில் மூன்று பேர் கூறியுள்ளனர்.

செர்கி பிரின் - நிக்கோல் ஷானஹான் ஆகியோருக்கு பிறந்த மகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான மருத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதே வேளையில் தான் ஷனஹான் மற்றும் பிரின் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு சவாலான நேரம் என்று அறிக்கை கூறியது. இந்த நேரத்தில், ஷனாஹன் தனது கணவர் இல்லாமல் அதிகப்படியாக வெளியே செல்லவும், பாரட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.
இந்த நிலையில் 2021 இலையுதிர்காலத்தில், நிக்கோல் ஷானஹான் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார், அதில் பிரின்னின் நண்பரான எலான் மஸ்க் அழைப்பு விடுக்கப்பட்டுக் கலந்து கொண்டார். அதே வருடத்தின் பிற்பகுதியில் எலான் மஸ்க் மற்றும் ஷனாஹன் இடையே பாலியல் உறவு ஏற்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த கேள்விக்குறியான பார்ட்டி 2021 டிசம்பரில் நடந்தது, மியாமியில் எலோன் மஸ்க்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் நடத்தினார். இந்த நிகழ்வின் போது, எலோன் மஸ்க், ஷனஹானுடன் கெட்டமைன் என்னும் போதைப் பொருளை எடுத்துக் கொண்டனர், மேலும் இருவரும் "பல மணிநேரம் ஒன்றாக மறைந்துவிட்டனர்" என்று நான்கு பேர் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ஷனஹான் பின்னர் தனது கணவரான செர்ஜி பிரின்-யிடம், தான் மஸ்க் உடன் உடலுறவு கொண்டதாக கூறினார், அதன் பின்பு இதே விஷயத்தை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் கூறினார். விருந்து முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரின் மற்றும் ஷனஹன் பிரிந்தனர். 2022 இல், வேறுபாடுகளைக் காரணமாக விவாகரத்து கோரினார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications