AI துறையில் பெரும் புரட்சியை செய்து வரும் OpenAI நிறுவனம் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாக இருக்க வேண்டும் என துவங்கப்பட்டாலும், இணை நிறுவனரான சாம் ஆல்ட்மேன் இந்த தொழில்நுட்பத்தையும், சேவைகளையும் லாபகரமானதாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார்.
இந்த நேரத்தில் தான் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட்-ன் 10 பில்லியன் டாலர் முதலீடு வந்தது. இந்த முதலீட்டின் மூலம் மைக்ரோசாப்ட் OpenAI நிறுவனத்தின் சேவைகள், தொழில்நுட்பம் என அனைத்தையும் பயன்படுத்த துவங்கியது. இந்த AI தொழில்நுட்பத்தை வேகமாக வர்த்தகமயமாக்குவது OpenAI நிர்வாகத்திற்கு பெரும் பிரச்சனையாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் OpenAI - மைக்ரோசாப்ட் முதலீட்டின் மூலம் குறிப்பிடத்தக்க அதிகாரத்தை சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் பெற்றது, இதன் வாயிலாக சாம் ஆல்ட்மேன் வர்த்தகமயமாக்கும் திட்டத்தை வேகப்படுத்தினார்.
இதை நிர்வாகத்திற்கு மறைத்து, நிலையாக பதில் அளிக்காத காரணத்தால் சாம் ஆல்டமேன் மற்றும் OpenAI நிறுவனத்தின் தலைவர் Greg Brockman ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா-வின் ஆட்டம் இதோடு நிற்கவில்லை, OpenAI நிறுவனத்தின் முதலீடுகள் தொடர்ந்து பலன் அளிக்கவும், AI பந்தயத்தில் தொடர்ந்து முன்னோடியாக இருக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சி அணியில் தலைவகராக OpenAI நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாம் ஆல்ட்மேன் மற்றும் Greg Brockman ஆகியோரை நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
சாம் ஆல்ட்மேன் மற்றும் Greg Brockman நியமனம் குறித்து சத்ய நாடெல்லா டிவிட்டரில் வெளியிட்ட நிலையில் இதற்கு எலான் மஸ்க் கிண்டலாக இனி அவர்கள் டீம்ஸ் பயன்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலி குறித்து கிண்டலடித்தார். இதை தொடர்ந்து Satya ftw (OpenAI நிறுவனத்தில் நடந்த கலவரம் சத்யா-வுக்கு தான் லாபம்) என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications