உலகிலேயே பிரபலான Bromance ஆக புகழப்பட்ட எலான் மஸ்க் - டொனால்டு டிரம்ப் மத்தியிலான நட்பு, கடந்த வாரம் டிவிட்டர் கருத்து போரில் தூள் தூளாக உடைந்தது. இந்த நிலையில் டிரம்ப் குறித்து ரொம்ப பேசிட்டேன், தப்பு தான் என கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்டுள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கடந்த வாரம் X தளத்தில் பதிவிட்ட கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தார். "டிரம்பைப் பற்றி எனது சில பதிவுகளுக்கு மிகவும் வருந்துகிறேன். அதிகமாக பேசிவிட்டேன்," என அவர் X-இல் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவுகள் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ட்ரம்ப் கொடுத்த வார்னிங்: எலான் மஸ்க்-கின் இந்த மன்னிப்பு போஸ்ட் செய்வதற்கு முன்பு, ஒரு முக்கியமான வார்னிங் கொடுத்தார். வழக்கமாக பல்வேறு செய்தி சேனலுக்கு பேட்டி அளிப்பது போல் டிரம்ப் NBC செய்தி சேனலிடம் பேசும் போது, "டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு, எதிராக எலான் மஸ்க் வேட்பாளர்களை ஆதரிக்க திட்டமிட்டதாக வந்த தகவல்களுக்கு பதிலளித்த ட்ரம்ப், "அவர் அவ்வாறு செய்தால், அதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்," பேசினார்.
எலான் மஸ்க்கின் பதிவுகள், அமெரிக்க இடைத் தேர்தல்களில் ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்களுக்கு எதிராக அவர் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற செய்திகளை தொடர்ந்து ரிபப்ளிக் கட்சியில் சலசலப்பு நிலவியது. காரணம் எலான் மஸ்க் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவிய 300 மில்லியன் டாலர் தான் அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நிலையில் எலான் மஸ்க்-ன் தற்போதைய நிலைபாடு ஆட்சியை பாதிக்கும் என்ற அச்சத்தில் டிரம்ப் இந்த வார்னிங் கொடுத்துள்ளார்.
மஸ்க்கிற்கும் ட்ரம்பிற்கும் இடையேயான குறுகிய கால மோதலில் எலான் மஸ்க்கின் இந்த வருத்தம் தெரிவிக்கும் பதிவு பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் டிரம்ப் எலான் மஸ்க் நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்கள், மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். டிரம்ப்-ன் இந்த பேச்சுக்கு முக்கிய காரணம் எலான் மஸ்க்-ன் கடந்த வார டிவீட் தான்.
பொருளாதார மந்தநிலை எச்சரிக்கை: டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், டிரம்பின் வரிக் கொள்கைகளால் 2025-இன் இரண்டாம் பாதியில் அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை (ரெசிஷன்) சந்திக்கும் என X தளத்தில் எச்சரித்தார். இது அமெரிக்க பொருளாதாரம் குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது.
ட்ரம்பின் மசோதா மீது விமர்சனம்: மஸ்க், ட்ரம்பின் "பெரிய அழகான மசோதாவை" "வெறுக்கத்தக்க" மற்றும் "பயனற்ற செலவுகள் நிறைந்தது" என X-இல் கடுமையாக விமர்சித்தார், இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதவி நீக்க கோரிக்கை: மஸ்க், ட்ரம்பை பதவி நீக்க வேண்டும் என்ற X பதிவுக்கு ஆதரவு தெரிவித்து, துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக்க வேண்டும் எனக் கூறினார், இது அமெரிக்க அரசியலில் சர்ச்சையை உருவாக்கியது.
எப்ஸ்டீன் குற்றச்சாட்டு: ட்ரம்ப், எப்ஸ்டீன் விவகாரத்தில் தொடர்புடையவர் எனவும், அதனால் எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியிடப்படவில்லை எனவும் மஸ்க் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்தார், இது மேலும் விவாதங்களை தூண்டியுள்ளது.
டிரம்ப் குறித்த மஸ்க்கின் கருத்துகளும் அதன் மூலம் டிரம்ப் கொடத்த வார்னிங் டெஸ்லாவின் பிராண்ட் மதிப்பு, பங்கு மதிப்பு, எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு ஆகியவை கடுமையாக பாதித்தது. எலான் மஸ்க் சொத்து மதிப்பு பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. தற்போது 411.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் சூழலில், குறிப்பாக இடைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், இது போன்ற பதிவுகள் பொது மக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே விவாதத்தை தூண்டியுள்ளன. மஸ்க்கின் வருத்தம் இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருமா என்பது தெளிவாகவில்லை. ட்ரம்ப் இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதிலளிப்பார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications