ரஷ்யா - உக்ரைன் போர்: எலான் மஸ்க் டிவிட்டரில் வாக்கெடுப்பு.. கடுப்பான உக்ரைன் அதிபர்..!

ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் குறைந்தபாடு இல்லை, இந்நிலையில் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-ஐ ஒத்தைக்கு ஒத்தை சண்டையிட அழைத்த எலான் மஸ்க், திங்கட்கிழமை ரஷ்யா - உக்ரைன் அமைதிக்காக டிவிட்டரில் முக்கியமான வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

இந்த வாக்கெடுப்பைக் கண்டு கடுப்பான உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy தனது டிவிட்டரில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தினார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கும் எலான் மஸ்க் ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து பல உதவிகளை உக்ரைன் நாட்டிற்குச் செய்து வருகிறார். ஆனால் தற்போது செய்துள்ள ட்வீட் மூலம் எலான் மஸ்கிற்கு உக்ரைன் மீதான பார்வை மாறிவிட்டது எனத் தெரிகிறது.

107 மில்லியன் மக்கள்

107 மில்லியன் மக்கள்

எலான் மஸ்க் டிவிட்டரில் சுமார் 107 மில்லியன் மக்கள் அவரைப் பின்தொடர்கிறார், இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவும் அமைதி திரும்பவும் ஒரு வழியை முன் வைத்துள்ளார். இது சரியா தவறா என்று வாக்கெடுப்பும் நடத்தியுள்ளார்.

 ட்வீட்

ட்வீட்

 எலான் மஸ்க் செய்த ட்வீட்டில்

- ஐநா சபையின் மேற்பார்வையின் கீழ் இணைக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்தவும். மக்களின் விருப்பம் இல்லையெனில் ரஷ்யா வெளியேற வேண்டும்.

- 1783 முதல் கிரிமியா முறையாக ரஷ்யாவின் ஒரு பகுதி (க்ருஷ்சேவின் தவறு வரை).

- கிரிமியா பகுதிக்கு நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

- உக்ரைன் தொடர்ந்து நியூட்ரலாக இருக்க வேண்டும்.

இது சரியா தவறா என்று போல் கேள்வி வைத்துள்ளார்.

24 லட்சம் பேர் பதில்

24 லட்சம் பேர் பதில்

இந்தக் கேள்விக்கு இதுவரையில் சுமார் 24 லட்சம் பேர் பதில் அளித்துள்ளனர், இதில் 60.2 சதவீதம் போர் தவறு என்றும், 39.8 சதவீதம் பேர் சரி என்றும் பதில் அளித்துள்ளனர். ரஷ்ய - உக்ரைன் போரில் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

 உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர்

எலான் மஸ்க்-ன் இந்தப் பரிந்துரைக்குப் பலர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கடுப்பானார். இதைத் தொடர்ந்து அவர் தனது டிவிட்டரில் எந்த எலான் மஸ்க் உங்களுக்குப் பிடித்துள்ளது உக்ரைன்-ஐ அதிகரிக்கும் எலான் மஸ்க்-யா? அல்லது ரஷ்யா-வை ஆதரிக்கும் எலான் மஸ்க்-யா..? என்று POLL பதிவிட்டு உள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், "நான் இன்னும் உக்ரைன்-க்கு தான் ஆதரவாக இருக்கிறேன், ஆனால் தொடர்ந்து போர் நடந்தால் உக்ரைனுக்கும், உலகிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+