ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்.. ஊழியர்களுக்கு ஆக்சஸ் கட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ட்விட்டர் நிறுவனத்தினை கையகப்படுத்தியதில் இருந்தே, ட்விட்டர் ஊழிர்களையும், பயனர்களையும் மிக பரபரப்பாக வைத்துள்ளார் எலான் மஸ்க்.

 

ட்விட்டரின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற பதற்றத்தின் மத்தியில் ட்விட்டர் அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆக்சஸ் கார்டுகள் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து ட்விட்டர் ஊழியர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் வெளியாகவில்லை என்ற குறற் சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் ட்விட்டரில் என்ன தான் நடக்குது? இனி ட்விட்டர் இருக்குமா? இல்லையா? இது இன்னும் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுந்துள்ளது.

அதிரடி மாற்றங்கள்

அதிரடி மாற்றங்கள்

எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் ஒன்றில், ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக நேரம் போக கூடுதலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும். நிறுவனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு இருந்தால், இல்லையெனில் தாரளமாக வெளியேறிக் கொள்ளலாம். இதற்கு உங்களுக்கு விருப்பமா? இல்லையெனில் மூன்று மாத சம்பளத்தினை வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள், இதற்கு 2 நாட்களில் பதில் கூறுங்கள் என்பது போல் கடுமையான மெயில் ஊழியர்களுக்கு அனுப்பினார்.

நாங்கள் இருக்கோம்?

நாங்கள் இருக்கோம்?

எலான் மஸ்கின் இந்த மெயிலால் கோபமடைந்த ஊழியர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலும் பற்பல ஊழியர்கள் வெளியேறவே விருப்பம் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் உழியர்கள் சிறிய அளவிலான ஊழியர்கள் மட்டுமே அங்கேயே இருந்து எலான் மஸ்கின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பணிபுரிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எப்போது வரையில் மூடல்?
 

எப்போது வரையில் மூடல்?

Platformer's Zoe Schiffer அறிக்கையின் படி, ட்விட்டர் அலுவலக கட்டிடங்கள் நவம்பர் 21 வரையில் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது ட்விட்டர் ஊழியர்கள் பெரியளவில் ராஜினாமா செய்து வரும் நிலையில், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இருந்தால் இருங்கள் இல்லையெனில் வெளியேறலாம் என்று கூறிய எலான் மஸ்க், இதற்கெல்லாம் தயாங்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை

ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை

எது எப்படியோ சில தினங்களுக்கு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதும், ஊழியர்களுக்கான பேட்ஜ்கள் முடக்கப்பட்டுள்ளதும் உண்மையே. எனினும் இது குறித்த விவரங்கள் எதுவும் ஊழியர்கள் உள்பட யாருக்கும் தெரியவில்லை.

எலான் மஸ்கின் கையில் ட்விட்டரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற அச்சம் ஊழியர்கள் ஏற்கனவே நிலவி வந்தது. தற்போது ட்விட்டர் எதிர்காலம் வீணாகிவிடுமோ? என்ற அச்சம் ஊழியர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

பிரச்சனை அதிகரிக்கலாம்

பிரச்சனை அதிகரிக்கலாம்

இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் ட்விட்டரின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வெளியேற திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது மேற்கொண்டு ட்விட்டர் நிறுவனத்திற்கு பிரச்சனையாக மாறலாம். இது மேற்கொண்டு ட்விட்டரின் எதிர்காலத்தினை பாதிக்குமே தவிர, வளர்ச்சி உதவாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும் சலசலப்புகள்

பெரும் சலசலப்புகள்

எப்படியிருப்பினும் நவம்பர் 21 அன்று அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று முழு நிலையும் தெரியவரும் எனலாம்.

எனினும் ட்விட்டர் ஊழியர்களுக்கு கூட எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது ஏன்? என்ற சலசலப்புகள் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk:Twitter temporarily shut down offices after mass resignation

Twitter offices are being temporarily shut down and access cards issued to employees are not working
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X