உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெக் தொழிலதிபருமான எலான் மஸ்க், தனது முன்னாள் காதலி கனடா நாட்டு பாடகி கிளேர் கிரைம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காதலரை அறிமுகப்படுத்தினார்.
மூன்று குழந்தைகளின் தாயான கிரைம்ஸ், Beauty and the Beast என்ற கேப்ஷன் உடன் தனது காதலனுடன் மூன்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்பதை டேக் செய்யப்படவில்லை என்றாலும்..

நம்ம இணைய வாசிகள் சும்மா இருப்பார்களா தேடிப்படித்து மொத்த ஜாதகத்தையும் எடுத்துவிட்டனர். கிளேர் கிரைம்ஸ் உடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர் 35 வயதான டி.ஜே மாடியோ 'அந்யமா' மில்லெரி என்று கூறப்படுகிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலான நிலையில் எலான் மஸ்க் தனது X கணக்கில் கிளேர் கிரைம்ஸ்-ஐ அன்ஃபாலோ செய்துள்ளார். இதையும் இணையவாசிகள் கண்டுப்பிடித்து டிரெண்டாக்கியுள்ளனர்.
52 வயதான எலான் மஸ்க் சிறுபிள்ளதனமாக கிளேர் கிரைம்ஸ் போட்டோ பகிர்ந்த உடன் அன்ஃபாலோ செய்துள்ளார், சொல்லபோனால் இவரும் பல பெண்களை இன்று வரையில் டேட்டிங் செய்து வருகிறார். இவ்வளவு ஏன் தனது நிறுவன ஊழியர் ஒருவருடன் ரகசிய தொடர்பில் 2 குழந்தைகளை பெற்றுள்ளார் எலான் மஸ்க்.

மார்ச் 23ம் தேதி இந்த புகைப்படங்களை கிரைம்ஸ் பதிவிட்டார், எலான் மஸ்க் அன்ஃபாலோ செய்த சம்பவம் மார்ச் 23 அல்லது 24 ஆம் தேதி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.


கிரைம்ஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் 2018 ஆம் ஆண்டில் தங்கள் காதலை வெளிப்படுத்தி, 2022 மார்ச் வரை சில இடைவெளி உடன் டேட்டிங் செய்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், முதலில் X Æ A-12 என்ற மகனும், பின்னர் 2021 இல் வாடகைத் தாயின் மூலம் பிறந்த எக்சா டார்க் சிடேரியல் மஸ்க் என்ற மகளும் பிறந்தனர். இந்த தம்பதிக்கு டெக்னோ மெக்கானிகஸ் என்ற மற்றொரு மகனும் உள்ளார்.
தற்போது, எலான் மஸ்க் மற்றும் கிரைம்ஸ் ஆகியோர் தங்கள் மூன்று குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற ஆவணங்களில், எலான் மஸ்க், "ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலிருந்தே அவர்களின் கவனித்து, தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தேன்" என்று கூறியுள்ளார். இதேபோல் கிரைம்ஸ் தனது பங்கிற்கு குழந்தைகளின் பாதுகாப்பைப் பெற்ற போராடி வருகிறார்.


Click it and Unblock the Notifications