மஹிந்திரா-விடம் தோற்றுப்போன எலான் மஸ்க்.. Make in India-வின் பவர் இதுதான்..!!

எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மின்சார கார்களை விற்பனை செய்வதற்கான புக்கிங்கை தொடங்கி இரண்டு மாதம் ஆகி இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு மாத காலத்தில் எதிர்பார்த்த வரவேற்பு டெஸ்லா கார்களுக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை.

மின்சார வாகன உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக பிஒய்டி, வின்ஃபாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வதேச சந்தையை ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கிவிட்டன . இதனால் உலக அளவில் டெஸ்லா கார் விற்பனை சரிந்தது.

மஹிந்திரா-விடம் தோற்றுப்போன எலான் மஸ்க்.. Make in India-வின் பவர் இதுதான்..!!

இந்த சூழலில் உலகின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவை நோக்கி வருகை தந்தது டெஸ்லா. இந்தியாவில் மும்பை , டெல்லி என இரு நகரங்களில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. முதல் கட்டமாக டெஸ்லா நிறுவனம் தன்னுடைய model y மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. கடந்த ஜூலை மாதமே இந்த கார்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

இந்தியாவில் model y மின்சார காரின் எக்ஸ் ஷோரூம் விலை 58.89 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. டெஸ்லா முன்பதிவு தொடங்கும் முன்னர் வரை பலரும் டெஸ்லா, டெஸ்லா என ஆர்வம் காட்டினர் ஆனால் அந்த ஆர்வம் கார்களுக்கான முன்பதிவில் எதிரொலிக்கவில்லை. ஏனெனில் இந்த இரண்டு மாத காலத்தில் 600 பேர் மட்டுமே டெஸ்லாவின் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக டெஸ்லா நிறுவனம் 2000க்கும் அதிகமான கார்களை இந்தியாவில் இந்த ஆண்டு இறக்குமதி செய்வதாக இருந்த நிலையில் அதனை வெறும் 600 கார்களாக மட்டுமே குறைத்திருக்கிறது . இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் போய் இருப்பது எலான் மஸ்கிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற நாடுகளில் விட்ட சந்தையை இந்தியாவில் பிடித்து விடலாம் என்ற நோக்கத்தில் தான் இந்திய சந்தைக்குள் கால் பதித்தார் எலான் மஸ்க். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மின்சார கார்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. இந்தியா மக்களைப் பொருத்தவரை ஒரு பொருளின் விலை அதற்கான பிராண்ட் வேல்யூ, நம்பிக்கை குறிப்பாக சுதேசி பொருளா என்பதை பார்த்து தான் வாங்கும் முடிவையே எடுப்பார்கள். இந்தியாவில் மேட் இன் இந்தியா திட்டம் வென்றதற்கு இது தான் காரணம்.

மேலும் ஆரம்ப விலையே 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதால் அதுபோன்ற ஆடம்பரமான கார்களை வாங்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக மிகக் குறைவு . அதே வேலையில் இந்திய சந்தையிலேயே மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் டெஸ்லா நிறுவனத்திற்கு நிகராக நவீன வடிவமைப்புகள் கொண்ட மேட் இன் இந்தியா வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்து சாதனை படைத்திருக்கின்றன .

மஹிந்திரா-விடம் தோற்றுப்போன எலான் மஸ்க்.. Make in India-வின் பவர் இதுதான்..!!

டெஸ்லாவையும் மஹிந்திரா நிறுவனத்தையும் நாம் ஒப்பீடு செய்து பார்த்தால் ஆகஸ்ட் 23ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் பேட்ஸ்மேன் சீரிஸை அடிப்படையாக கொண்ட ஒரு காரை அறிமுகம் செய்தது. Mahindra BE 6 Batman Edition என்ற இந்த தனித்துவமான காரை அறிமுகம் செய்த 2.25 நிமிடங்களிலேயே அனைத்து கார்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

மஹிந்திராவை பொறுத்தவரை தனக்கென பிரத்தியேகமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் உருவாக்கி வைத்திருக்கிறது. அது மட்டும் இன்றி தன்னுடைய புதுமையான மார்க்கெட்டிங் உத்திகள் மூலமும் வடிவமைப்புகள் மூலமும் மக்களிடையே கவனம் பெற்ற ஒரு பிராண்ட் ஆகும். ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்றுதான் மகேந்திரா தன்னுடைய பேட்மேன் காரை அறிமுகம் செய்தது மொத்தமே 300 கார்கள் தான் உற்பத்தி செய்யப்படும் என்ற ஒரு டிமாண்டை சந்தையில் உருவாக்கியது. காரின் விலை 27.79 லட்சம் ரூபாய் என்று அறிவித்தது. இந்த அனைத்து முயற்சிகளும் மஹிந்திராவிற்கு வெற்றியாகவே கிடைத்திருக்கிறது .

முன்பதிவு தொடங்கிய 2.25 நிமிடங்களிலேயே 300 கார்களும் பதிவு செய்யப்பட்டு விட்டன. சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து தான் இந்த கார்கள் டெலிவரி செய்யப்பட உள்ளன. எனவே இந்திய சந்தையை பொறுத்தவரை உள்நாட்டு தயாரிப்புகளுக்கு தான் மக்களிடையே வரவேற்பு உண்டு என்பதை இது நிரூபித்துவிட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+