எலான் மஸ்க் டிவிட்டரை அனைவருக்குமான தளமாக மாற்றி வரும் இதேவேளையில் போலி கணக்குகளை கண்டுப்பிடித்து மூடுவது அவசியமாகியுள்ளது, இது மட்டும் அல்லாமல் டிவிட்டர் கூடுதல் வருமானத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவ்விரண்டுக்கும் ஒரே தீர்வை எலான் மஸ்க் முன் வைத்துள்ளார்.
நேற்று இஸ்ரேல் நாட்டின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு உடன் எலான் மஸ்க் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வந்த போது, டிவிட்டர் அதாவது X தளம் 100 சதவீதம் ஸப்ஸ்கிரிப்ஷன் கொண்ட சமுக வலைத்தளமாக எதிர்காலத்தில் மாற உள்ளது என தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு குறித்து பேசுகையில், X தளத்தில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் சிறிய தொகையை மட்டும் செலுத்தி டிவிட்டரை பயன்படுத்தும் நிலைக்கு மாற்ற வேண்டும், இதன் மூலமாக தான் டிவிட்டரில் இருக்கும் போலி பாட்-களை (BOT) நீக்க முடியும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
இனி டிவிட்டரை பயன்படுத்த வேண்டும் என்றாலே பணத்தை கொடுத்து தான் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை உருவாகும். ONLYFANS-க்கு அடுத்தப்படியாக 100 சதவீதம் ஸப்ஸ்கிரிப்ஷன் கொண்ட சமுக வலைத்தளமாக டிவிட்டர் மாற உள்ளது. இதனால் குறிப்பிட்ட சதவீத வாடிக்கையாளர்களை டிவிட்டர் இழக்க கூடும்.
ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து சிறிய அளவிலான பேமெண்ட்-ஐ பெறுவது மூலம் பெரிய அளவிலான வருமானத்தை பெற முடியும் என்பதால் டிவிட்டருக்கு இது ஜாக்பாட் ஆக உள்ளது. இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும், எவ்வளவு தொகை வசூலிக்கப்படும் என்பது குறித்து எவ்விதமான தகவல்களையும் எலான் மஸ்க் வெளியிடவில்லை.
டிவிட்டர் ஒரு சூப்பர் ஆப் ஆக மாற கட்டமைக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகைய முடிவு அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications