உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் பெரும் முதலீட்டில் 6வது நிறுவனமாக டிவிட்டரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
டிவிட்டரை எப்படியாவது உலகின் டாப் சமுகவலைத்தள நிறுவனமாக மாற்றி மக்கள் சுதந்திரமாகத் தங்களின் கருத்துக்களைப் பதிவிடம் தளமாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் 46.5 பில்லியின் டாலர் செலவு செய்து வாங்கிய டிவிட்டரை நிறுவனத்தில் விரைவில் லாபகரமான மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதற்காக 50 ஊழியர்களை அழைத்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் மற்றும் அவருடைய ஆலோசனை குழு உறுப்பினர்கள் டிவிட்டரின் அனைத்து மட்டத்திலும் பணியாற்றி வருகின்றனர். இக்குழு ஊழியர்கள் பணிநீக்கம், முக்கிய மாற்றங்கள், விளம்பரதாரர்களுடன் பேச்சுவார்த்தை, கண்டென்ட் மாடரேஷன் கொள்கை எனப் பலவற்றைத் துரிதமான முறையில் செய்யத் துவங்கியுள்ளது.
டிவிட்டர்
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தை விரைவில் தனது வழிக்குக் கொண்டு வரவும், லாபகரமான நிலைக்கு மாற்றி முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நம்பிக்கையைப் பெற டிவிட்டரைக் கைப்பற்றிய நாளில் இருந்து எலான் மஸ்க் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் அலுவலகத்திலேயே தான் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டேவிட் சாக்ஸ், ஸ்ரீராம் கிருஷ்ணன்
டிவிட்டர் நிறுவனத்தை மறுசீரமைப்புச் செய்ய எலான் மஸ்க் தலைமையிலான குழுவில் வென்சர் கேப்பிடல் முதலீட்டாளரான டேவிட் சாக்ஸ், டிவிட்டர் முன்னாள் ஊழியரும், Andreessen Horowitz ஜெனரல் பார்ட்னருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இந்த இருவரும் டிவிட்டர் வாங்க எலான் மஸ்க்-கிற்கு நிதியுதவி செய்துள்ளதாகவும் தெரிகிறது.
எலான் மஸ்க் war room
எலான் மஸ்க் "war room" டேவிட் சாக்ஸ், ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து எலான் மஸ்கின் குடும்ப அலுவலகத்தின் தலைவர் ஜாரெட் பிர்ச்சால், எலான் மஸ்க்-ன் பர்சனல் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ மற்றும் டெக் முதலீட்டாளரான ஜேசன் கலகானிஸ் ஆகிவரும் உள்ளனர்.
50 ஸ்பெஷல் ஊழியர்கள்
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் தலைவராக இருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் இருந்து சுமார் 50 இன்ஜினியர்கள், ப்ராடெக்ட் தலைவர்கள், ஊழியர்களை டிவிட்டரில் பணியாற்ற அழைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி ஒரு நாளுக்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை மக்கள் மற்றும் பன்முகத்தன்மை அதிகாரி தலானா பிராண்ட், கோர் டெக்னாலஜிஸ் பிரிவின் பொது மேலாளர் நிக் கால்டுவெல், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி லெஸ்லி பெர்லாண்ட், டிவிட்டரின் ப்ராடெக்ட் தலைவர் ஜே சல்லிவன் மற்றும் உலகளாவிய விற்பனை பிரிவின் துணைத் தலைவர் ஜீன்-பிலிப் மஹூ ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கடுமையான டெட்லைன்
எலான் மஸ்க் டிவிட்டரை விரைவாக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிகவும் குறைந்த அளவிலான டெட்லைன் கொடுத்து உள்ளார். டிவிட்டர் இன்ஜினியர்களுக்குப் பல முக்கியமான பணிகளைச் செய்து முடிக்க நவம்பர் மாத முதல் இரண்டு வாரம் டெட்லைன் ஆகக் கொடுக்கப்பட்டு உள்ளது.
7 நாளும் வேலை, தினமும் 12 மணிநேரம் வேலை
இதன் மூலம் டிவிட்டர் நிறுவனத்தில் இருக்கும் மேனேஜர்கள் தங்களது ஊழியர்களைத் தினமும் குறைந்தது 12 மணிநேரம் மற்றும் வாரத்தில் 7 நாளும் பணியாற்ற வேண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது. டெட்லைன்-க்குள் பணிகளை முடிக்காத நிலையில் டிவிட்டர் ஊழியர்கள் தங்களது பணியை இலக்க நேரிடம் நிலை உருவாகியுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications