உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் முதல் முறையாக 302 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளார்.
இதுவரை உலகப் பணக்காரர்கள் பட்டியலில் வந்தவர்கள் யாரும் 300 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டாத நிலையில் எலான் மஸ்க் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். இந்த மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் டெஸ்லா நிறுவனம் மட்டுமே காரணம் என்றால் மிகையில்லை.
டெஸ்லா நிறுவனம்
உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ள டெஸ்லா நிறுவனம் தற்போது அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் பெற்று வரும் நிலையில் கார் உற்பத்தி அளவீட்டையும் அதிகரித்து வருகிறது டெஸ்லா.
டெஸ்லா பங்கு முதலீடுகள்
இதன் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வரும் காரணத்தால் டெஸ்லா பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
23 சதவீத பங்குகள்
எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் மட்டும் சுமார் 23 சதவீத பங்குகளை வைத்துள்ள வேளையில், டெஸ்லாகப் பங்கு விலை அதிகரிக்க எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பும் அதிகரித்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் எலான் மஸ் கீழ் இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் அடுத்தடுத்து வர்த்தக விரிவாக்கம் செய்து வருகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
இதன் மூலம் இன்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெஸ்லா பங்கு விலை 1,083 டாலர் வரையில் உயர்ந்துள்ள வேளையில் எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 302 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
ஜெப் பைசோஸ்
மேலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பைசோஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 199 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் முதல் 2 இடத்தில் இருப்பவர்கள் மத்தியிலேயே கிட்டதட்ட 100 பில்லியன் டாலர் அளவில் வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது.
2 டிரில்லியன் டாலர்
எலான் மஸ்க் தொடர்ந்து தனது வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் டெஸ்லா விரைவில் 2 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டையும் எலான் 500 பில்லியன் டாலர் சொத்து மதிப்பீட்டையும் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரின் டிவிட்டர் பதிவுகள் தான் முதலீட்டாளர்களுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications