உலகம் முழுவதும் இன்று முக்கிய பேசுபொருளாக இருப்பது எலான் மஸ்க்-கிற்கு கொடுக்கப்பட்ட 1 டிரில்லியன் டாலர் சம்பளம் தான். டெஸ்லா வளர்ச்சிக்கு எலான் மஸ்க் முதலும், முக்கிய காரணமாக இருந்தாலும், 1.5 டிரில்லியன் மதிப்புகொண்ட ஒரு நிறுவனத்தின் சிஇஓ-க்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் எல்லாம் அநியாயமாகத் தெரியும். ஆனால் டெஸ்லா நிர்வாகத்தில் இருக்கும் 75 சதவீதம் பேர் எதற்காக இந்த மாபெரும் சம்பளத்திற்கு ஒப்புதல் அளித்தனர்..? எலான் மஸ்க்-க்கிற்கு வைக்கப்பட்ட 4 தரமான செக் தான் இதற்குப் பதில்.
டெஸ்லா நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் அரசியல் பயணம் இதன் பங்குதாரர்களைக் கோபமடையச் செய்தது, இதேபோல் எலான் மஸ்க் சமீப காலமாக சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து வருகிறார். எலான் மஸ்க் இல்லையெனில் டெஸ்லா இல்லை என்ற நிலை தான் தற்போது இருக்கிறது.

இப்படியிருக்கையில் எலான் கடந்த 6 மாதமாக 1 டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என அடம்பிடித்து நிற்கிறார். இந்த நிலையில் டெஸ்லா பங்குதாரர்கள் அடங்கிய நிர்வாகம், எலான் மஸ்க் அடுத்த 10 வருடத்திற்கு நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ளவும் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்கவும் இந்த 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சம்பள தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இந்த மாபெரும் சம்பளத்தை எலான் மஸ்க்-கிற்கு எளிதாக கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த டெஸ்லா நிர்வாக குழு அவரால் எட்ட முடியாத இலக்குகளை அடுக்கி வைத்துவிட்டு, இந்த இலக்கை தொட்டுவிட்டால் 1 டிரில்லியன் டாலர் சம்பளத்தைப் பெறலாம் எனச் சவால் விடும் வகையில் இந்த சம்பள தொகுப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து டெஸ்லா பங்குகளில் முதலீடு செய்வோருக்கு இந்த தகவல் மிகவும் முக்கியமானது. தற்போது டெஸ்லா நிர்ணயம் செய்துள்ள இலக்குகளில் எலான் மஸ்க் 50 சதவீதம் தொட்டால் கூட இதன் பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். இதனால் எலான் மஸ்க்-கிற்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டார்கெட்-ஐ கூர்ந்து கவனிக்க வேண்டும்.
12 பகுதிகள்
எலான் மஸ்க் 1 டிரில்லியன் டாலர் சம்பளத்தை அதாவது 88 லட்சம் கோடி அல்லது ரூ.88,000,000,000,000 சம்பளம் பெற வேண்டும் என்றால் 12 வர்த்தகம் இலக்குகள் மற்றும் 12 நிதியியல் இலக்குகளை அடைய வேண்டும் என்று 2025 நவம்பர் 6 அன்று டெஸ்லா பங்குதாரர்கள் அறிவித்து எலான் மஸ்க்-ன் 1 டிரில்லியன் டாலர் சம்பளத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
அதாவது 12 இலக்குகளுக்கு தலா 1 சதவீத பங்குகள் என மொத்தம் 12 இலக்குகளை அடைய 12 சதவீத டெஸ்லா பங்குகள் எலான் மஸ்க்-கிற்கு அளிக்கப்படும். தற்போது எலான் மஸ்க் கையில் 13 சதவீத பங்குகள் இருக்கும் நிலையில் 12 இலக்குகளை அடைந்தால் அவரின் கையில் 25 சதவீத பங்குகள் இருக்கும். எலான் மஸ்க் கையில் 25 சதவீத பங்குகள் வந்தால் டெஸ்லா நிர்வாகத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார், இதுதான் அவருடைய டார்கெட்.
சரி விஷயத்திற்கு வருவோம், டெஸ்லா நிர்வாகம் வைத்த 4 தரமான செக் என்ன..?
நிதியியல் இலக்குகள்:
சந்தை மதிப்பு இலக்குகள்
டெஸ்லா சந்தை மதிப்பு தற்போது 1.5 டிரில்லியன் டாலராக உள்ளது, நவம்பர் 6ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட சம்பள ஆணைப்படி, டெஸ்லா முதலில் 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடைய வேண்டும். அதன் பின் 500 பில்லியன் டாலர் வீதம் 9 முறை உயர வேண்டும், இறுதியாக இரண்டு ஆண்டில் தலா 1 டிரில்லியன் டாலர் மதிப்பில் உயர வேண்டும். இப்படி 12 கட்டத்தில் 10 ஆண்டுகளுக்குள் டெஸ்லா சந்தை 8.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை அடைய வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இது என்விடியா-வின் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். இந்த இலக்குகள் 2035 வரை அடையப்பட வேண்டும்.
400 பில்லியன் டாலர் EBITDA
நிதியியல் ரீதியாக இந்த 10 ஆண்டுகளில் கடைசி 2 வருடத்தில் நான்கு காலாண்டுகளிலும் தொடர்ச்சியாக 400 பில்லியன் டாலர் சரிசெய்யப்பட்ட EBITDA அளவீட்டை எட்ட வேண்டும். 2024இல் எபிட்டா அளவு வெறும் 16 பில்லியன் டாலர், இறுதி இலக்கை கணக்கிட்டால் தற்போதைய அளவில் இருந்து சுமார் 25 மடங்கு உயர்வு.
உதாரணமாகக் கூகுள் செப்டம்பர் காலாண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் அளவீட்டை எட்டியிருந்தது, Amazon 180 பில்லியன் டாலர் வருவாய் அளவீட்டை எட்டியது.
வர்த்தக இலக்குகள்:
20 மில்லியன் வாகன விநியோகம்
டெஸ்லா அடுத்த 10 ஆண்டுகளில் 20 மில்லியன் வாகனங்களை டெலிவரி செய்தாக வேண்டும் என்ற முக்கியமான இலக்கை டெஸ்லா நிர்வாகம் முன்வைத்துள்ளது. டெஸ்லா துவங்கி ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் இதுவரையில் 8 மில்லியன் வாகனங்கள் மட்டுமே டெலிவரி செய்த டெஸ்லா அடுத்த 10 வருடத்தில் 12 மில்லியன் அதாவது 1.2 கோடி வாகனங்களை டெலிவரி செய்தாக வேண்டும். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 2 மில்லியன் வாகன உற்பத்தி செய்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். இது டெஸ்லாவின் வரலாற்றில் மிகப்பெரிய உற்பத்தி இலக்கு.
உற்பத்தி அதிகரித்தல் மட்டுமே, டெலிவரி செய்ய முடியும் என்பதால் டெஸ்லா கட்டாயம் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் படி இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்க வாய்ப்புகள் துவங்கியுள்ளது.
1 மில்லியன் ரோபோடாக்ஸி செயல்பாடு
அமெரிக்காவில் தற்போது மிக முக்கியமான சேவையாக மாறியிருக்கும் தானியிங்கி டாக்சி சேவையின் டெஸ்லாவும் உள்ளது. இது பெரிய வர்த்தகமாக மாறும் வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் டெஸ்லா நிர்வாகம் இதிலும் முக்கிய இலக்கை கொடுத்துள்ளது.
டெஸ்லா அடுத்த 10 வருடத்தில் 1 மில்லியன் ரோபோடாக்ஸி வாகனங்களை வணிக ரீதியாக மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இயக்கியிருக்க வேண்டும். தற்போது ஆஸ்டின் நகரில் சில நூறு வாகனங்கள் மட்டுமே சோதனையில் உள்ளன. 2026 இறுதிக்குள் 300-400 வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப சவால்களை உள்ளடக்கியது. NHTSA அனுமதி தேவை. இப்படியிருக்கையில் வெறும் 400 வாகனங்கள் எண்ணிக்கையை எப்படி 10,00,000 வாகனங்களாக உயர்த்த முடியும்..? இதற்கான உற்பத்தியும் டெஸ்லா தொழிற்சாலையில் தான் நடக்க வேண்டும் என்பது கூடுதல் சவால்.
1 மில்லியன் ஆப்டிமஸ் ரோபோ உற்பத்தி
அடுத்த 10 வருடத்திற்குள் டெஸ்லா 1 மில்லியன் ஆப்டிமஸ் மனித ரோபோக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்கையும் எலான் மஸ்க் தலையில் வைத்துள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் ஆண்டுக்கு 1 மில்லியன் ரோபோக்கள் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளதாக நவம்பர் மாத பங்குதாரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். ஒரு ரோபோ விலை 20,000 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் தற்போது முன்மாதிரி நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
10 வருடத்தில் மாடல் நிலையில் இருந்து முழுமையாக இயங்க கூடிய ரோபோவாக மாற்றி 10 வருடத்தில் 10 லட்சம் ரோபோக்களை வாங்கும் வாடிக்கையாளர்களை எலான் மஸ்க் தேடி பிடிக்க வேண்டும்.
10 மில்லியன் FSD சந்தாதாரர்கள்
அடுத்த 10 வருடத்தில் டெஸ்லா குறைந்தது மூன்று மாதங்கள் சராசரியாக 10 மில்லியன் ஃபுல் செல்ஃப் டிரைவிங் (FSD) சந்தாதாரர்களை தொடர்ச்சியாக பெற வேண்டும். 2025 தொடக்கத்தில் டெஸ்லா வாகனங்களில் 12 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே FSD சந்தாதாரர்களாக பெற்றுள்ளது.
பிற நிபந்தனைகள்
எலான் மஸ்க் இந்த 10 ஆண்டுகளுக்கு CEO அல்லது நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும். பதவியை விட்டு வெளியேறினாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ வெஸ்ட் செய்யப்படாத பங்குகள் அளிக்கப்படமாட்டாது. இதன் மூலம் 2035 வரையில் எலான் மஸ்க் இப்பதிவியில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த 4 வர்த்தக இலக்குகளை அடைந்தால் மட்டுமே நிதியியல் இலக்குகளை அடைய முடியும். எனவே இதை தான் 4 தரமான செக் என கூறப்படுள்ளது. இதேபோல் வர்த்தக மற்றும் நிதி இலக்குகளை அடைய வேண்டும் என்றால் குறைவான செலவில் அதிகப்படியான வாகனங்களையும், ரோபோக்களையும் தயாரிக்க வேண்டும்.
இதேபோல் இந்த 10 வருடத்திற்கு எலான் மஸ்கிற்கு எவ்விதமான சம்பளமும் இல்லை, பிற பங்கு ஒதுக்கீடுகளும் இல்லை என்பது கூடுதல் தகவல்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications