இந்திய சந்தையில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற எலோன் மஸ்க்-ன் கனவுத் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவாக மத்திய அரசு தரப்பில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏரிய கதையாக மாறியுள்ளது.
இந்தியாவில் டெஸ்லா கார்களை மற்ற இறக்குமதி கார்கள் போல் அல்லாமல் குறைந்த வரி விதிப்புக் கொண்டு நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பது எலான் மஸ்க் திட்டம். ஆனால் மத்திய அரசு எலக்ட்ரிக் கார் என்பதாலும், சுற்றுசூழல்-க்குப் பாதிப்பு இல்லை என்பதாலும் தனியாக டெஸ்லா-க்கு மட்டும் வரிச் சலுகை அளிக்க முடியாது எனத் தெரிவித்தது.

இதேவேளையில் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் இந்தியாவுக்கு டெஸ்லா வருவதற்கான உதவிகளைச் செய்வதாக எலான் மஸ்க்-யிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசும், டெஸ்லா அதிகாரிகளும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி சமீபத்தில் வரிச் சலுகை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மானியங்கள் அல்லது விலக்குகளை வழங்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று மத்திய அரசு இப்போது கூறியுள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சோம் பிரகாஷ், டெஸ்லா அல்லது பிற வெளிநாட்டுக் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உள்ளூர் மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக இந்தப் பதிலளித்தார்.
இந்தியாவில் உற்பத்தி செய்ய உறுதியளிக்கும் வகையில் மின்சாரக் கார் தயாரிப்பாளர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குவது குறித்து எலான் மஸ்க்-ன் டெஸ்லாவும் இந்திய அரசாங்கமும் ஒரே முடிவில் இருப்பதாகச் சமீபத்தில் தெரிய வந்தது. இந்தியாவில் டெஸ்லா அடுத்த சில வருடத்தில் தொழிற்சாலை அமைக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சோம் பிரகாஷ் பதில் மூலம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு எவ்விதமான சலுகையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனால் எலான் மஸ்க் திட்டம் படி இந்தியாவில் மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை தயாரித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் திட்டத்தை வேகப்படுத்துவது தான் கடைசியில் இருக்கும் ஒரே வழி. ஆனா இதை உடனே துவங்க முடியாது என்பது அடுத்த சிக்கல்.


Click it and Unblock the Notifications