எலான் மஸ்க் தலைமையிலான X என பெயர் மாற்றப்பட்ட டிவிட்டர் தளம் தற்போது சூப்பர் ஆப் ஆக மாறும் பாதையில் பயணித்து வருகிறது, சூப்பர் ஆப் என்றால் அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் இருக்கும் வகையிலான தளம். எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி பின்பு ஏற்கனவே யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளத்தில் இருக்கும் சேவைகள் பெரும்பாலானவை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக X தளத்தில் வேலைவாய்ப்பு தேடல் மற்றும் பதிவு சேவையை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லின்கிடுஇன் மற்றும் பல பிரபலமான வேலைவாய்ப்பு தேடுதல் தளத்திற்கு போட்டியாக எலான் மஸ்க் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளார். ஏற்கனவே டிவிட்டரில் பல வேலைவாய்ப்பு குறித்த பதிவுகள் இருக்கும் வேளையில் இதற்கான ஒகு தளத்தை உருவாக்கி அதன் மூலம் வருமானம் ஈட்டவும் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க்.

X தளம் தற்போது ப்ரொபஷனல் நெட்வொர்க்கிங் டொமைன் உடன் வேலைவாய்ப்பு தேடுதல் தளத்தின் பீட்டா வெர்ஷன்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதுகிட்டத்தட்ட லின்கிடுஇன் தளத்தை போலவே இயங்கும் கட்டமைப்பை உடையது, டிவிட்டரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வாடிக்கையாளர்கள் இல்லாதது X Hiring பிரிவு சேவைக்கு பெரும் பலமாக உள்ளது.
இப்பிரிவு சேவைக்காக எலான் மஸ்க் டிலிட்டரில் XHiring என்ற தனி பக்கத்தை துவங்கியது மட்டும் அல்லாமல், பீட்டா வெர்ஷன் சேவை வேண்டுமெனில் verified செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக அளிக்கப்பட உள்ளதாக தெகிவிக்கப்பட்டு உள்ளது.
XHiring சேவை தளம் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது, இந்த சேவை மூலம் வெரிபைட் செய்யப்பட்ட நிறுவனங்கள் காலியாக இருக்கும் வேலைவாய்ப்பு குறித்த பதிவிடலாம். இந்த சேவை ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் ஹோல்டர்களுக்கு மட்டுமே.
இந்த சேவைக்கு மாதம் 1000 டாலர் கட்டணம் உள்ளது, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 82300 ரூபாய். டிவிட்டர் போன்ற தளத்தில் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்வது மூலம் நிறுவனத்தின் பெயர் பிரபலமாவது மட்டும் அல்லாமல் விரைவாக தகுதியான ஆட்களை பணியில் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications