எலான் மஸ்க் இந்தப் பெயருக்குப் பின்னால் ஏதோ சக்தி இருப்பது போல் இவருடைய டிவிட்டரைப் பாலோ செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் இவருடைய ஒவ்வொரு டிவீட்டும் அதிரடியாகவே உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என ஆலோசனை செய்து வரும் நிலையில், எலான் மஸ்க் ஒரே ஒரு டிவீட் மூலம் அரசின் ஆலோசனை அர்த்தமற்றது எனக் கூறிவிட்டார்.
இந்நிலையில் இன்று முக்கியமான ஒரு டிவீட்டை செய்துள்ளார்.
டிவிட்டர் பயோ
இன்று உலகம் முழுவதும் பேசி வரும் முக்கியமான விஷயம் பேஸ்புக் தனது ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியது தான். ஆனால் இந்தப் பெயரை எலான் மஸ்க் பழைய டிவிட்டர் பயோவில் 'Meta For K'-வில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க் திருடியுள்ளதாக ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து டிவீட் செய்திருந்தார். இதற்கு எலான் மஸ் கிண்டலாக ஒரு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டார்.
ஸ்டார்லிங்க்
இது மட்டும் அல்லாமல் எலான் மஸ்க் மட்டும் அவரது நிறுவனங்களைச் சுற்றி பல செய்திகள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் சேவையைத் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விரிவாக்கம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டில் இண்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவை மிகப்பெரிய அளவில் உதவும். இதை விரைவாகச் செய்ய இரு பிலிப்பைன்ஸ் டெலிகாம் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எலான் மஸ்க்.
சிங்கப்பூர்
இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது டெஸ்லா மாடல் 3. முதல் முறையாகச் சிங்கப்பூரில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது டெஸ்லா.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு
இவை அனைத்திற்கும் மேலாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு இன்று 302 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது. முதல் முறையாக ஒரு தனி மனிதரின் சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications