சென்னை: முன்பெல்லாம் வீடு வாங்குவதற்கு, வாகனம் வாங்குவதற்கு மட்டுமே வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்கும் . பின்னர் சுற்றுலா செல்வதற்கு இஎம்ஐ, மொபைல் போன் உள்ளிட்ட கருவிகள் வாங்குவதற்கு இஎம்ஐ என படிப்படியாக அனைத்து விஷயங்களுக்கு பரவி வருகிறது. தற்போது அழகு கலை சார்ந்த சிகிச்சைகளுக்கும் இஎம்ஐ என்ற வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது.
நடிகர்கள் மட்டுமே செய்து வந்த சிகிச்சைகள்: இந்தியாவில் முகங்களை சீரமைத்து கொள்வது, தலைமுடிக்கு சிகிச்சை எடுத்து கொள்வது , தோல் சுருக்கங்களை நீக்குவது என அழகுசார்ந்த சிகிச்சைகளிலும் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். நடிகர் நடிகைகள் மட்டுமே செய்து வந்த இது போன்ற சிகிச்சைகள் தற்போது சாதாரண மக்களுக்கு கிடைத்து வருகின்றன. இதற்கு அவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் இஎம் ஐ வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வகை சிகிச்சைகளுக்கு செலவு அதிகமாகும். அதுவே கடன் மூலம் செலுத்தி விடலாம் என்ற டிரெண்ட் இளைஞர்களை ஈர்க்கிறது.

கடன் பெறும் வசதி: இந்தியாவில் fibe, save in, qube health ,arogya finance ஆகிய நிறுவனங்கள் இது போன்ற அழகு சார்ந்த சிகிச்சைகளுக்கு கடன் வழங்குகின்றன. அதாவது Botox, IV drip, lip filler,hair transplant ஆகிய சிகிச்சைகளை நீங்கள் கடன் வாங்கி மேற்கொள்ளலாம், அந்த தொகையை மாதாந்திர இஎம் ஐ முறையில் செலுத்திவிடலாம். இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இதுபோல கடன் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் கூறுகிறது.
25-30 வயதுக்கு உட்பட்டவர்கள்: இது போன்ற கடன்களை wellness loan என அழைக்கிறார்கள். இந்தியாவில் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் இது போன்ற அழகு சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது. இதற்காக இவர்கள் கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளதாம். ஒரே முறையாக லட்சக்கணக்கில் செலுத்துவதற்கு பதில் மாதம் இஎம் ஐ செலுத்திவிடலாம் என்ற வசதி பலரை இது போன்ற சிகிச்சைகளை நோக்கி திருப்பி இருக்கிறது.
நகரங்களில் அதிகம்,: குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய இளைஞர்கள் இதுபோன்ற அழகு சார்ந்த சிகிச்சைகளுக்கு அதிக அளவில் கடன் வாங்குகிறார்களாம். ஃபைப் என்ற நிறுவனம் இது போன்ற அழகு சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய வி எல் சி சி, வி கேர் உள்ளிட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அங்கே சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இஎம்ஐ வசதியை ஏற்படுத்தி தருகிறது. இந்த நிறுவனம் மாதந்தோறும் 20 கோடி ரூபாயை இதுபோன்ற சிகிச்சைகளுக்கு கடனாக வழங்குவதாக தெரிவிக்கிறது.

தலைமுடி சிகிச்சைக்கு அதிக கடன்: இவ்வாறு வழங்கப்படும் கடன்களில் 50 சதவீதம் தலைமுடி சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்காக மட்டுமே வழங்கப்படுகிறதாம். அதேபோல தோல் சிகிச்சை மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளும் இந்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக ஃபைப் நிறுவனம் தெரிவித்துள்ளது . பெருநகரங்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநிலங்களிலும் தங்கள் செயலியை பயன்படுத்தி கடன் வாங்குவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.
ஆண்களே அதிகம் வாங்குகின்றனர்: அழகு சார்ந்த சிகிச்சைகளுக்கு கடன் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என கியூப் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெரிவிக்கிறார். பெண்களை விட தற்போது ஆண்களே இது போன்ற காஸ்மெட்டிக் சிகிச்சைகளுக்கு அதிகம் செலவு செய்கின்றனர், அதிகம் கடன் வாங்குகின்றனர் என கூறுகிறார் . தலைமுடி சிகிச்சைக்கு ஒரு நபர் 65 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறாராம், அதேபோல மற்ற சிகிச்சைகளுக்கு 30,000இல் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர் என கூறுகிறது.
வேகமாக வளரும் துறை: கடந்த ஆண்டு தங்களிடம் ஒரு லட்சம் பேர் கடன் வாங்கிய நிலையில் இந்த ஆண்டு மூன்று லட்சமாக உயர்ந்திருக்கிறது என கியூப் ஹெல்த் நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் காஸ்மெட்டிக் சர்ஜரி சந்தை என்பது 99,475 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக உயரும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இது 15% என்ற காம்பவுண்டிங் விகிதத்தில் வளர்கிறதாம்.
சேவிங் இன் என்ற தளம் அழகு கலை சார்ந்த சிகிச்சைகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் விண்ணப்பங்களை சரி பார்த்து கடன் வழங்கி இருப்பதாக தெரிவிக்கிறது . சராசரியாக 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை இதுபோன்ற சிகிச்சைகளுக்கு கடன்களை வழங்குவதாக இந்த நிறுவனம் கூறுகிறது. பற்களை சீரமைக்கும் சிகிச்சைகளுக்கும் பலர் கடன் வாங்குவதாக தெரிவிக்கிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications