பெங்களூரு: இந்தியாவில் குழந்தைகளுக்கான கல்வி கட்டண செலவுகள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆண்டுதோறும் கல்வி கட்டணங்கள் உயர்கிறது, ஆனால் எங்களுடைய வருமானங்கள் உயரவில்லை என பெற்றோர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கவலைகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த ஒரு தந்தை லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு இந்தியாவில் பள்ளி கட்டணங்கள் எவ்வளவு உயர்ந்துள்ளன மிடில் கிளாஸ் மக்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுப்பதற்காக எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

ஆஷிஷ் சிங்கால் என்பவர் இந்தியாவின் பெரிய கிரிப்டோ செயலியான காயின்ஸ்விச் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். இவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் மகளை வழக்கமான ஒரு சிபிஎஸ்ஈ பள்ளியில் சேர்ப்பதற்காக விசாரித்ததையும் அப்போது அவர்கள் கூறிய கல்வி கட்டணம் தன்னை அதிர்ச்சி அடைய வைத்தது குறித்தும் விரிவாக பதிவிட்டுள்ளார் . மூன்றாம் வகுப்புக்கு 2.1 லட்சம் ரூபாய் கட்டணமாக கேட்கிறார்கள் என கூறியிருக்கிறார். இத்தனைக்கும் இது ஒரு சர்வதேச பள்ளி கூட இல்லை வழக்கமான ஒரு சிபிஎஸ்ஈ பள்ளி என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

30 சதவீதம் கல்வி கட்டணம் உயர்வு என்பதை திருட்டு என கூறாமல் வேறு என்னவென்று அழைப்பது என அவர் கேள்வி எழுத்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு பல பெற்றோரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது . பெங்களூருவில் சிபிஎஸ்ஈ பள்ளிகளில் பெரிய இன்ஜினியரிங் கல்லூரிகளை விட அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர் என கூறியிருக்கிறார். மூன்றாம் வகுப்புக்கு 2 லட்சம் ரூபாய் கட்டணம் இன்ஜினியரிங் இன்ஜினியரிங் படிப்பதற்கு கூட இவ்வளவு செலவாகாது என பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பெரும்பாலான நகரங்களில் இதுதான் நிலைமை என கூறும் அவர், ஆண்டுதோறும் இந்திய நகரங்களில் செயல்படும் பள்ளிகளில் எல்லாம் 10 முதல் 30 சதவீதம் வரை கல்வி கட்டணங்கள் வழக்கமான முறையில் உயர்த்தப்படுகின்றன . ஆனால் மிடில் கிளாஸ் மக்களின் வருமானமும் கடந்த 10 ஆண்டுகளில் 0.4% மட்டுமே உயர்ந்துள்ளது. பெற்றோரின் வருமானத்தை விட பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் ஆண்டுதோறும் பல மடங்கு உயர்கிறது என்பதுதான் உண்மை என கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் நான்காம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 1.8 லட்சம் கல்வி கட்டணமாக கேட்கிறார்களாம் என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் இந்திய குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 19% தொகையை கல்விக்காகவே செலவிடுகின்றன என கூறுகிறார். அரசு வெளியிடும் பணவிக்க தகவலின் படி பார்க்கும்போது இந்தியாவில் கல்வி பணவீக்கம் என்பது 4 சதவீதம் ஆனால் உண்மை அப்படி இல்லை என தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம் நர்சரி பள்ளிகளில் அட்மிஷன் எடுப்பதற்காகவே பெற்றோர் இஎம்ஐ-க்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். கல்லூரி படிப்புக்கு சேமித்து வைப்பது எல்லாம் மறந்து விடுங்கள் , தற்போது தொடக்கப் பள்ளி கல்விக்காகவே பெற்றோர் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்திருக்கிறார். இது வெறும் பணம் வீக்கம் மட்டும் கிடையாது நம்முடைய சேமிப்புகளையும் நம் குடும்பங்களின் கனவுகளையும் அழிக்கும் ஒன்று என குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications