துபாயை சேர்ந்த விமான சேவை வழங்குநரான எமிரேட்ஸ் குழுமம் தங்களின் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளத்தை போனஸ் வழங்குவதாக அறிவித்து அனைவரையும் திக்குமுக்காட வைத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நிறுவனத்தின் லாபம் உச்சத்தை எட்டி இருப்பதே இதற்கு காரணம்.
எமிரேட்ஸ் குழுமம் 2023 - 2024ஆம் நிதியாண்டில் 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 71% அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் உச்சபட்ச லாபத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் லாபம் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.
கொரோனா தொற்றின் போது உலகம் முழுவதும் விமான சேவைகள் முடங்கின. இதனால் மக்கள் விமான போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. அந்த வகையில் எமிரேட்ஸ் குழுமமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டி தற்போது பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது.
எமிரேட்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது நிறுவனம் விமான சேவையில் வலுவான இடத்தில் இருப்பதற்கு லாப விகிதமே சாட்சி என கூறியுள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 71% உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து எமிரேட்ஸ் குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 வார சம்பளம் அதாவது ஐந்து மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தற்போது எமிரேட்ஸ் குழுமத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து 1,12,406 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 10 சதவீதம் அதிகம். இதனிடையே உலக அளவில் தங்களது சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என எமிரேட்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் குழுமத்தில் எமிரேட்ஸ் மற்றும் டிநடா என்ற இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எமிரேட்ஸ் மட்டுமே 4.7 பில்லியன் டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63 சதவீதம் அதிகமாகும் . அதேவேளையில் டிநடா நிறுவனம் 0.4 பில்லியன் டாலர்களை லாபமாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாப விகிதம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் குழுமம் 2023-24ஆம் நிதியாண்டில் 51.9 மில்லியன் பயணிகள் தங்களது விமானங்களில் பயணம் செய்திருப்பதாகவும், 2.2 மில்லியன் டன் சரக்குகளை கடந்த ஓராண்டில் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறியுள்ளது.
151 இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வரும் எமிரேட்ஸ் குழுமம் தற்போது 260 விமானங்களை பயன்படுத்தி வருகிறது. புதிதாக 310 விமானங்களுக்கு ஆர்டர் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications