எந்தவொரு பணியையும் செய்வதற்கு நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் 100 சதவீதம் திருப்தியாக இருந்தால் மட்டுமே அதை சிறப்பாக செய்ய முடியும். சில நாட்கள் நாம் உடல் நலக் குறைவு உள்பட ஏதாவது ஒரு காரணத்தால் அசவுகரியமாக இருப்போம் அந்த சூழ்நிலையில் தினசரி பணிகளை கூட சரியாக செய்ய முடியாமல் மிகவும் அவதிப்படுவோம்.
அப்போது கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் மீண்டும் தெம்பாக வேலை பார்க்கலாம் என்று எண்ணுவோம். இதை நாம் எல்லோரும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் கட்டாயம் உணர்ந்து இருப்போம்.

நிறுவனங்களில் பணியாளர்கள் உடல் நலம் சரியில்லை என்று விடுமுறை கேட்பார்கள் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் லீவு கொடுத்து விடுவார்கள். ஆனாலும் சில அதிகாரிகள் தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் தான் தொழிலாளிகளிடம் பெரிய வெறுப்பு ஏற்படும்.
சில பணியாளர்கள் சகித்துக் கொண்டு வேலையில் தொடருவார்கள் சிலர் நிறுவனத்துக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு சென்று விடுவார்கள். அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் அது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இருப்பினும் பணியாளருக்கும், உரிமையாளருக்கும் வாட்ஸ்அப்பில் அது தொடர்பாக நடந்த பெரும் உரையாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நிறுவன பணியாளர் தனது முதலாளிக்கு வாட்ஸ்அப்பில், எனக்கு உடலி நிலை சரியில்லை, இரவு முழுவதும் தூங்க முடியாமல், காலையில் குளிர்ந்த வியர்வையுடன் எழுந்தேன், காய்ச்சல் அதிகரிக்கிறது மற்றும் என் உடலின் ஒவ்வொரு பகுதியும் வலிக்கிறது. இன்று விடுமுறை தாருங்கள் என்று தகவல் அனுப்பினார்.
அதற்கு அவருடைய மேலதிகாரி, மருத்துவர் அறிக்கை இல்லாமல் லீவு கொடுக்க முடியாது என்று, தயவு செய்து காரணத்துக்காக ஒரு மருத்துவர் அறிக்கை பெறவும் பதில் அனுப்பினார். ஆனால் அதற்கு பணியாளர், 3 ஆண்டுகளாக நான் மருத்துவரிடம் செல்லவில்லை. காய்ச்சலுக்கு டாக்டரிடம் செல்ல என்னிடம் பணம் இல்லை. நேற்று நான் ஒரு மணி நேரத்துக்கு 8 டாலருக்கு வேலை செய்தேன். டாக்டரை பார்க்க நிறுவனத்தால் இழப்பீடு வழங்கப்படுகிறதா? என்று பதில் அனுப்பினார்.
உரிமையாளர் பதிலுக்கு, இல்லை ஆனால் நீங்கள் ஒரு மருத்துவர் அறிக்கை வழங்க முடியாவிட்டால் நீங்கள் வேலை செய்ய வேண்டும். அது வெறும் காய்ச்சல் என்றால் நீங்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டும். சரியா, நீங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் பணம் (சம்பளம்) நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் என்பதை பொறுத்து என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பணியாளர், சரி, நீங்கள் உங்க போனில் நாள் முழுவதும் ஓய்வு அறையில் இருந்து மகிழுங்கள். நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்று பதில் பதிவு செய்தார். இந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் ரெடிட் வலைதளத்தில் ஷேர் செய்யப்பட்ட பின்னர் வைரலானது.
உடல் நலம் சரியில்லாத பணியாளரிடம் முதலாளி காட்டிய அணுகுமுறையை பலரும் விமர்சனம் செய்து கருத்து பதிவு செய்து இருந்தனர். பணியாளர்களை நோய்வாய்ப்பட்டவர்களா மாற்றும் நிறுவனங்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று ஒருவர் காட்டமாக பதில் அளித்து இருந்தார்.
மற்றொருவர், நானும் சிலருக்கு பொறுப்பாக இருக்கிறேன். சிலர் உடல் நலம் சரியில்லாத போதும் அலுவலகத்துக்கு வருவார்கள் நான் அவர்களை வேலை பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications