பிஎஃப் கணக்கில் இருந்து முழு பணத்தையும் எடுக்கலாமா? என்ன சொல்கிறது மத்திய அரசு?

நிறுவனங்களில் சம்பளத்திற்காக வேலை பார்க்கக் கூடிய நபர்களின் ஓய்வு காலத்திற்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகத்தான் இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊழியரின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும் ,அதே அளவிலான தொகையை அவருக்கு வேலை வழங்கிய நிறுவனமும் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும்.

பிஎஃப் கணக்கில் சேரும் பணமானது நாம் ஓய்வு பெறும் காலத்தில் ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடிகிறது. நடுவில் ஏதேனும் அவசர தேவைகள் ஏற்படும் போது பிஎஃப் கணக்கில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை எடுத்து பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தருகிறது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது என்பதால் ஊழியர் ஓய்வு பெறும் போது அவருடைய கணக்கில் ரொக்கமாக ஒரு தொகை இருக்கும். இது தவிர மாதாந்திர ஓய்வூதிய தொகையும் கிடைக்கும்.

பிஎஃப் கணக்கில் இருந்து முழு பணத்தையும் எடுக்கலாமா? என்ன சொல்கிறது மத்திய அரசு?

இந்த நிலையில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டு இருக்கிறதாம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிஎஃப் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுக்கும் வகையில் மாற்றம் கொண்டுவர ஈபிஎஃப்ஓ திட்டமிட்டு இருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஈபிஎஃப் ஓ சந்தாதாரர்களுக்கு தங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதுமாக எடுத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறதாம்.

தற்போதைக்கு ஒரு ஊழியர் தன்னுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை அவர் பணி ஓய்வு பெறும்போது அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கும்போது பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது . ஒருவேளை அரசு இந்த மாற்றத்திற்கு அனுமதி அளித்தால் ஈபிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்ப எடுப்பதற்கான வாய்ப்பு சம்பளதாரர்களுக்கு கிடைக்கும்.

மொத்த பணமும் இல்லாமல் 60% தொகையை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கலாமா என்ற ஆலோசனையும் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை வீடு கட்டுவது ,மருத்துவ தேவை, திருமண செலவுகள் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்து கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அரசு முழு தொகையையும் எடுக்கும் வாய்ப்பினை வழங்கினால் அது இந்த திட்டத்திற்கே எதிரானதாக அமையும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் பிஎஃப் கணக்கில் சேரும் பணம் என்பது ஓய்வூதிய காலத்திற்கு திட்டமிடப்பட்டு தான் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு வாய்ப்பை வழங்கும்போது மக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணத்தை முழுமையாக எடுத்து விடுவார்கள் எனவே ஓய்வு காலத்தில் அவர்களுக்கென எந்த ஒரு நிதி தொகுப்பும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளது .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+