பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. குறிப்பாக நடப்பு ஆண்டிலும் பரவி வரும் ஓமிக்ரான் மத்தியில் மீண்டும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில நிறுவனங்களில் ஊழியர்கள் ஹைபிரிட் மாடல் பணியினை செய்து வருகின்றனர்.
ஹைபிரிட் மாடல் பணி
எனினும் தற்போது ஆறுதல் கொடுக்கும் விஷயம் என்னவெனில், கடந்த ஆண்டினை போல நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி என்பது இல்லை. வீட்டில் இருந்தும் பணி செய்து கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்தும் பணி செய்யலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது ஒரு நெகிழ்வு தன்மையை அளிக்கும் என்பதால் இது நிரந்தரமாக தொடரலாம் என பல நிறுவனங்களும் ஆலோசித்து வருகின்றன.
வரிச்சலுகை
முன்னதாக இது தற்காலிகமாக பார்க்கப்பட்டாலும், தற்போது இது ஒரு நிரந்தர வழியாக பார்க்கப்படுகிறது. எனினும் ஒரு சாரர் 10 AAன் மூலம் கிடைக்கும் சலுகை கிடைக்காது என்ற கருத்தும் நிலவி வருகின்றது. ஏனெனில் சிறப்பு மண்டலங்களில் கிடைக்கும் வரிச்சலுகையினை நிறுவனங்களால் பெற முடியாது.
பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்?
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல நிறுவனங்களும் ஹைபிரிட் மாடல் பணியினை ஆராய்ந்து வருகின்றன. இதனால் சிறப்பு மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகையில் எவ்வித பாதிப்பும் இல்லாத அளவுக்கு இருக்க வேண்டும்.
செலவு அதிகரிக்கும்
ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதால், இணையக் கட்டணங்கள், வாடகை, மின்சார கட்டணம், பர்னிச்சர் செலவு என பல செலவுகளும் செய்யும் நிலைக்கு உள்ளது. இதற்காக நிறுவனங்கள் அலவன்ஸ்களை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்யும் நிலை இருந்தாலும், வரிச்சலுகையும் கிடைக்காது.
வரிச்சலுகை
இங்கிலாந்தில் ஒருவர் வீட்டில் இருந்து செய்யும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 6 பவுண்டுகள் கொடுக்கப்படுகிறது. அதோடு வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு 50,000 ரூபாய் கூடுதலாக விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்படுகின்றது.
ஆக இதேபோன்று வருடத்திற்கு ஒரு முறை 50,000 ரூபாய் வரையில் சலுகை அளிக்கலாம். அதேபோல மற்ற செலவுகளுக்கு 5000 ரூபாய் அல்லது கூடுதலாக வரிச்சலுகை 60,000 ரூபாயாக கொடுக்க வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். குறிப்பாக சாமனியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications