இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் கடந்த 3 வருடங்களாக அளித்து வந்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துவிட்டு அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அட்ரிஷன் விகிதம்
குறிப்பாகக் கட்டாயமாக அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ள நிறுவனங்களில் ஆகஸ்ட் மாதம் அட்ரிஷன் விகிதம் 29 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது, இதேபோல ஹைப்ரிட் மற்றும் ரிமோர்ட் வொர்க் சலுகையை அளிக்கும் நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் 19 சதவீதமாக உள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 90 சதவீத நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்தது, வெறும் 9 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ரிமோர்ட் வொர்க் சலுகை அல்லது ஹைபிரிட் மாடலை கடைப்பிடிக்க ஒப்புதல் அளித்தது என Aon என்னும் ஹெச்ஆர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
700 நிறுவனங்கள்
சுமார் 700 நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் ஜனவரி மாதம் 48 சதவீதம் நிறுவனங்கள் மட்டுமே ஹைப்ரிட் மாடலை பின்பற்றியது, இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
பெப்சிகோ, RPG குரூப், மெர்சிடீஸ் பென்ஸ், டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அலுவலகம் வர flexible approach-ஐ கையில் எடுத்துள்ளது. ஆனால் ஐடி துறையில் இது மொத்தமாக மாறியுள்ளது, முன்லைட்டிங் காரணமாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது.
உற்பத்தி துறை
உற்பத்தி துறையில் இருக்கும் பல நிறுவனங்கள் தற்போது நேரடியாக அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ள ஊழியர்களைத் தவிர, அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் சேவை அளிக்கப்பட்டு உள்ளது.
ராஜினாமா
ஆனால் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ள நிறுவனங்களில் வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது பொதுவாக அனைத்து துறையிலும் இகுக்கும் முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications