அடக் கொடுமையே.. இப்படி எல்லாம் பண்ணுவாங்களா.. எலான் மஸ்க் ஏன் இப்படி இருக்காரு?

ட்விட்டர் நிறுவனத்தினை கையகப்படுத்தியதில் இருந்து அடுத்தடுத்து பல மாற்றங்களை செய்து வருகின்றார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் நடந்து வரும் சில சம்பவங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

அந்த வகையில் தற்போது ட்விட்டர் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சொந்த செலவிலேயே டாய்லெட் பேப்பர்களை வாங்கி வந்து அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

ட்விட்டரின் பங்குகளை வாங்கிய முதல் நாளில் இருந்தே எலான் மஸ்க், எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதிரடியாகத் தான் இருந்து வருகின்றது. அனுதினமும் என்ன அறிவிப்பு வருமோ என்ற பதற்றத்திலேயே ஊழியர்கள் இருந்து வருகின்றனர். தான் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே தினசரி 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.

செலவு குறைப்பு

செலவு குறைப்பு

ஆக நஷ்டத்தினை குறைக்க பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். எலானின் சில நடவடிக்கைகள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் விதத்திலேயே இருந்து வருகின்றது எனலாம்.

துர்நாற்றம் வீசும் அலுவலகம்

துர்நாற்றம் வீசும் அலுவலகம்

அந்த வகையில் தான் ட்விட்டரின் தலைமையகமான சான் பிரான்சிஸ்கோவில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. இது தூய்மை பணியாளர்கள் சம்பளம் உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய நிலையில், எலான் மஸ்க் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.. இதற்கிடையில் பலரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளர்து. எலான் மஸ்கின் இந்த அடாவடி நடவடிக்கையானது தூய்மை பணியாளர்கள் வரையில் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 பராமரிப்பு ஊழியர்கள் பணி நீக்கம்

பராமரிப்பு ஊழியர்கள் பணி நீக்கம்

பராமரிப்பு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அலுவலகம் பராமரிப்பின்றி, கழிப்பறைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அங்குள்ள கழிவு பேப்பர்களை மாற்றக்கூட ஆட்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்கள் தங்கள் சொந்த பணத்தை வைத்து கழிவறை பேப்பர்களை வாங்கி வந்து பயன்படுத்தும் சூழல் இருந்து வருகின்றது.

இன்னும் என்ன செய்ய போகிறாரோ?

இன்னும் என்ன செய்ய போகிறாரோ?

சரியான பராமரிப்பு இல்லாததால் தலைமையகத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் ஊழியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்திகள் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் செய்ய எலான் மஸ்க் காத்திருக்கிறாரோ என்பதே ட்விட்டர் ஊழியர்களின் அடுத்த கவலையாக உள்ளது.

சொத்து மதிப்பு இழப்பு

சொத்து மதிப்பு இழப்பு

இது ஒரு புறம் எனில் மறுபுறம் எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் 200 பில்லியன் டாலரை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 16 லட்சம் கோடிக்கு மேல். தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை சரிவினைக் கண்டு வரும் நிலையில் இந்தளவுக்கு எலான் மஸ்க் இழப்பினை கண்டுள்ளார்.

சலசலப்புகள்

சலசலப்புகள்

குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, டெஸ்லா நிறுவனத்திலும் ஆரம்பத்தில் சில சில சலசலப்புகள் எழுந்துள்ளன. எனினும் தொடர்ந்து எலான் மஸ்க் அடுத்தடுத்த நடவடிக்கையினை எடுத்து வருகின்றார். இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ?  தெரியவில்லை.

சேவை மூடலா

சேவை மூடலா

ட்விட்டரின் மொத்தம் 6 தளங்களில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 2 தளங்களில் மட்டுமே பணியாற்றி வருகின்றனராம். இது தவிர செலவு குறைப்பின் ஒரு பகுதியாக டேட்டா செண்டரும் மூட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ட்விட்டரின் செயல்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதும் வெளியாகவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+