அடிக்கிற வெயில்ல இலவச மின்சாரமா.. இந்த பொன்னான திட்டம் பற்றி தெரியுமா?

சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் காரணமாக அடிக்கடி மின்கட்டணங்கள் உயர்கிறது. ஏனெனில், பலர் வசதியாக இருக்க ஏர் கண்டிஷனர் மற்றும் குளிரூட்டும் ஏர்கூலர்களைப் பயன்படுத்துவதால், இந்த விலை ஏற்றம் ஏற்படுகிறது. இந்த பருவ கால சவால்களை சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்த பொன்னான திட்டம் தான், இந்த பிரதம மந்திரியின் சூரிய ஒளி மின்சாரத் திட்டம். இதன் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரக் கட்டணத்தை சேமிக்க முடியும்.

மின் கட்டணத்திற்கு ஏற்படும் செலவை குறைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது தான் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம். இந்த திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் போன்றவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அடிக்கிற வெயில்ல இலவச மின்சாரமா.. இந்த பொன்னான திட்டம் பற்றி தெரியுமா?


இந்த இலவச சூரிய ஒளி மின்சாரத் திட்டம், சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூறையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்பவர்கள், இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுபோல் சோலார் பேனல்களை வீட்டின் மேல் கூரையில் பொருத்திக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் 300 யூனிட் மின்சாரம் வரை இலவசமாகப் பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 75,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு பிப்ரவரி 29ஆம் தேதி அன்று ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

PM Muft Bijli Scheme Registration என்று சொல்லப்படுகிற பிரதான் மந்திரி இலவச மின்சாரத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். மேலும், சோலார் பேனல்களை கொண்ட மேற்கூறையை அமைத்து மின்சார இணைப்புப் பொருத்திய சொந்த வீடாக இருக்க வேண்டும். வேறு எந்த திட்டத்தினையும் பயன்படுத்தி சூரிய சக்தி மின்சாரம் பெற மானியம் பெறுபவராக இருக்கக் கூடாது.

இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லலாம். அதன்பின் "அப்ளை ஃபார் ரூஃப் டாப்" என்ற மெனுவை கிளிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் உங்களது மாநிலம், மாவட்டம், மின்சாரத் விநியோக நிறுவனத்தின் பெயர் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை என்டர் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அனைத்து தேவையான விவரங்களையும் கொடுத்து முடித்த பிறகு, நீங்கள் உங்களுக்கான ஒப்புதலைப் பெறுவீர்கள்.

இந்தத் திட்டத்தின் மூலம் சோலார் பேனல்கள் அமைக்கும் வீடுகளில் 1 முதல் 2 கிலோ வாட் செயல் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு, ரூ. 30,000 மானியம் வழங்கப்படும். மேலும் 3 கிலோ வாட் செயல் திறன் கொண்ட சோலார் பேனல்கள் அமைக்கும் வீடுகளுக்கு ரூ. 18,000 மானியம் வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+