வீடு தேடி வரும் ரூ.1000.. பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்.. இது தெரியுமா?

சென்னை: பல வருடங்களாக இந்திய அரசாங்கம் தனது குடிமக்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த பாலிகா சம்ரிதி யோஜனா திட்டம். பாலிகா சம்ரிதி யோஜனா திட்டம் 1993 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பெண்களுக்கான திட்டம் ஆகும். இத்திட்டத்தின் நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். இந்தத் திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் அரசாங்கம் தரும் நிதி உதவிகளை பெற முடியும். இது அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். மேலும், இந்த திட்டமானது நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெண் சிசுக்கள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாலிகா சம்ரிதி யோஜனா திட்டம் 1997 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

வீடு தேடி வரும் ரூ.1000.. பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்.. இது தெரியுமா?


பாலிகா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பாலிகா சம்ரிதி யோஜனா திட்டம் நலிந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் பிறப்பு மற்றும் கல்வியை ஆதரிப்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் இம்முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பல நாட்கள் ஆக பெண் குழந்தைகளின் பிறப்புகள் பற்றி நேர்மறையான கண்ணோட்டம் இந்திய குடும்பங்களுக்கு இருந்து வருகிறது. இதனை மாற்றும் விதமாகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் கல்விக்கு உதவுவதால் அவர்கள் வருமானம் ஈட்டும் பெண்களாக வருங்காலத்தில் உருவெடுப்பார்கள் என்பதை உறுதி செய்யும் வகையிலும் இத்திட்டம் செயல்படுகிறது.

வீடு தேடி வரும் ரூ.1000.. பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்.. இது தெரியுமா?

ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பெண் குழைந்தைகள் இருந்தாலும் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் நன்மைகளை பெற முடியும். மேலும் அந்தக் குழந்தைகள் 15ஆம் தேதி ஆகஸ்ட் 1997 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும் பெண் குழந்தைகளின் பிறப்பிற்குப் பிறகு அந்த தாய்மார்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் மேலும் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி முடிந்தவுடன் ஒரு தொகை வழங்கப்படும். பெண் குழந்தைகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பை முடித்தவுடன் ஒரு ஆண்டுக்கு 300 ரூபாயும், நான்காம் வகுப்பு முடித்தவுடன் ஒரு ஆண்டுக்கு 500 ரூபாயும் மேலும் ஐந்தாம் வகுப்பில் 600 ரூபாயும், ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பில் 700 ரூபாயும் எட்டாம் வகுப்பில் 800 ரூபாயும், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் 1000 ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்ப்போம். நகர்ப்புற அல்லது கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களிடமிருந்து இந்த திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை பெற முடியும். மேலும் பிஎஸ்ஒய் இன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்தும் இந்த திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய முடியும். இந்த விண்ணப்ப படிவங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேறுபடும். அதன் பிறகு முறையாக அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அங்கன்வாடி பணியாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+