சென்னை: எல்லாத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பல பெண்கள் சொந்தமாக தொழில் செய்து அதில் சாதனை புரிந்து வருகின்றனர். இதுபோன்ற பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அருமையான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
உத்யோகினி( Udyogini ) திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் தொகை வழங்கி உதவி செய்கிறது. ரூ. 3 லட்சம் கடன் தொகை வழங்கப்படுவதோடு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

சமையல் எண்ணெய் உற்பத்தி செய்து வணிகம் செய்யும் பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. தெளிவாக சொல்லப் போனால் 3 லட்சம் கடன் வாங்கினால் ரூ. 1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதுமானது.
இதைப் போலவே கடன் பெறும் பெண்கள் சிறப்பு பிரிவினராகவோ அல்லது பொது பிரிவினராகவோ இருந்தால் அவர்களுக்கு ரூ.3 லட்சம் கடனில் அதிகபட்சமாக ரூ. 90,000 வரை மானியம் வழங்கப்படும். கடன் பெற்றவர்கள் ரூ.2.1 லட்சத்தை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.
இந்தத் திட்டத்தில் கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது ஏனெனில் கிராமத்திலிருந்து முன்னேற நினைக்கும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் இந்தத் திட்டத்தில் குறிப்பாக விவசாயம் செய்யும் பெண்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறிப்பாக வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகளால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் இந்த வங்கிகளில் வட்டியில்லா கடன் பெறுவது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் மூலம் சிறப்பு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் பெறுகின்றனர். இதற்கென அரசு எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை என்பது முக்கியமான தகவலாகும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்: கடன் பெற விரும்பும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த குடும்ப வருமான வரம்புகள் ஏதும் தேவையில்லை.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்களின் வயது 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். கடன் பெற விரும்பும் பெண்கள் இதுவரை தாங்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும். உத்தியோகினி திட்டத்திற்கு, விண்ணப்பிக்கும் பெண்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, சாதி சான்றிதழ்,வருமானச் சான்றிதழ்,பிறப்பு சான்றிதழ்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரிச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட்.
மேற்கண்ட ஆவணங்கள் மட்டுமல்லாமல், நீங்கள் என்ன தொழில் செய்ய விரும்புகிறீர்கள்.. அதற்கான செலவு எவ்வளவு.. வருமானத்தை ஈட்ட நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்.. என்பது போன்ற அறிக்கையையும், நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உத்யோகினி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: கடன்பெற விரும்பும் பெண்கள் மேற்கண்ட ஆவணங்களோடு அருகில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
சரி இந்தக் கடன் தொகை யாருக்கு எப்படி வழங்கப்படும் என்பதை பார்ப்போம். பழங்குடியின பெண்கள் அல்லது பட்டியலின பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதிலும் 50 சதவீத மானியம் கிடைக்கும். இது போன்ற கடனுக்கு அவர்களுக்கு எந்த வட்டியும் வசூலிக்கப்படாது. அதுவே பிசி மற்றும் பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கான வட்டி விகிதமாக 8 முதல் 12 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களுக்கு 30% மானியம் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications