சென்னை: லக்பதி நிதி திட்டத்தை போன வருடம் சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி நாடு முழுவதும் இருக்கும் 2 கோடி கிராமங்களில் உள்ள பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டத்தினை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் எவ்வாறு எல்இடி பல்பு தயாரிப்பது, ஆளில்லா விமானங்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங் வேலைகள் போன்ற திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லக்பதி தீதி திட்டத்தினை கொண்டு, அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி பெண்களில் இருந்து மூன்று கோடி பெண்களுக்கு உயர்த்த உள்ளதாக அறிவித்தார்.

இதனால் சுமார் மூன்று கோடி பெண்கள் தொழில்முனையும் பெண்களாக எதிர்காலத்தில் மாற வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தைப் பயன்படுத்தி பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் பொருட்களை எப்படி தயாரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும் இந்த சுயதொழில் மூலம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை கண்காட்சியிலோ அல்லது மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம். வரும் காலத்தில் பெண்களை பெரும் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். மேலும் தனக்குத் தேவையான அனைத்தையும் தாமே செய்து கொள்வதற்கும் வழி வகுக்கும். இந்தத் திட்டத்தினை தமிழ்நாட்டில் "லட்சாதிபதி சகோதரி" என்னும் பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?:
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நீங்கள் கால்நடை, மளிகை கடை, பெட்டிக்கடை போன்ற சிறு தொழில்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தால் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள் ஏதேனும் பொருட்களை இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்தால் உங்களுக்கு அதற்கான உரிமம் பெற்று தரப்படும். லக்பதி தீதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்களது வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் 18 முதல் 50 வயதுடைய பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் குறைந்தது 11 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை பயிற்சிகள் அளிக்கப்படும். அதற்குப் பிறகு இந்த திட்டத்தினை பயன்படுத்தி தொழில் தொடங்கும் பெண்களுக்கு, முதலீட்டிற்காக ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது. ஆனால் இதில் பயன் பெறும் பெண்கள் தங்களிடம் 10% முதலீட்டு தொகையை வைத்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க லக்பதி யோஜனா இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, இந்த திட்டம் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications