உங்கள் வீட்டு உதவியாளர்களின் நிதி நிலையை பாதுகாக்க.. இந்த விஷயங்களை எடுத்து சொல்லுங்க!

வீட்டு வேலைகளில் உதவுவது முதல் நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் வீட்டை நிர்வகிப்பது வரை அனைத்திற்கும் வீட்டில் பணிபுரியும் உதவியாளர்கள் பல குடும்பங்களுக்கு உயிர் நாடி போல உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு வருமானம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல விஷயங்களைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கும். கல்வி இல்லாததால் பல வீட்டு உதவியாளர்கள் தங்கள் நிதியை நிர்வாகிக்க போராடி வருகின்றனர் மற்றும் அவசர காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு நீங்கள் சிலவற்றை எடுத்துக் கூறலாம்.

சேமிப்புக் கணக்குகளைப் (Savings Account) பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும்: பணத்தை திறம்பட சேமிக்க உதவும் சேமிப்பு கணக்கு போன்ற விஷயங்கள் உங்கள் வீட்டு உதவியாளர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். குறைந்தபட்ச பேலன்ஸ் மற்றும் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகள் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள், எந்த தனியார் அல்லது பொது வங்கியிலும் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.

உங்கள் வீட்டு உதவியாளர்களின் நிதி நிலையை பாதுகாக்க.. இந்த விஷயங்களை எடுத்து சொல்லுங்க!

அத்தகைய கணக்கைப் பயன்படுத்துவது அவர்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரத்தில் வட்டி மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.

முதலீட்டு திட்டங்கள் மற்றும் அரசாங்க திட்டங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும்:

பல முதலீடுகள் மற்றும் அரசாங்கத் திட்டங்கள் உங்கள் வீட்டு உதவியாளரின் சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு வங்கிக் கணக்குகள், காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றியும் தெரியவைக்கின்றன.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY): இந்தத் திட்டம் அனைவருக்கும் வங்கி கணக்கை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. குறிப்பாக முதல் முறையாக வங்கி சேவைகளை பெறுபவர்களுக்கு. தனிநபர்கள் குறைந்தபட்ச பேலன்ஸ் தேவையில்லாத வங்கிக் கணக்கைத் திறக்கலாம்.

கூடுதலாக, அதற்கு ரூ.30,000 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுத் தொகையையும், ரூ.2 லட்சம் (ஆகஸ்ட் 28, 2018க்குப் பிறகு திறக்கப்பட்ட கணக்குகளுக்கு) அல்லது ரூ. 1 லட்சம் (ஆகஸ்ட் 28, 2018க்கு முன் திறக்கப்பட்ட கணக்குகளுக்கு) விபத்துக் காப்பீடும் கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா (APY): APY என்பது அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும். முதலீட்டாளர் செலுத்தும் பங்களிப்புகளைப் பொறுத்து, 60 வயதை எட்டியவுடன், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை இந்தத் திட்டத்தின் மூலம் பென்ஷன் பெறலாம். பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால், டெபாசிட் செய்யப்பட்ட கார்பஸ் நாமினிக்கு திருப்பித் தரப்படும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): SSY என்பது பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பு மற்றும் எதிர்கால கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், உங்கள் உதவியாளர் தங்கள் மகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்காக ஒரு கார்பஸை உருவாக்க முடியும். 10 வயதுக்குட்பட்ட பெண்ணின் பெற்றோர் மூலம் SSY கணக்கைத் திறக்கலாம் மற்றும் சிறுமிக்கு 21 வயது ஆனவுடன் அல்லது திருமணம் ஆனவுடன் (18 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும். 1 ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். சிறு சேமிப்பு திட்டங்களில், SSY அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் பெண் 18 வயதை அடைந்தவுடன், கல்வி தொடர்பான செலவுகளுக்காக கார்பஸில் 50% வரை திரும்பப் பெறலாம்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY): PMSBY என்பது அரசு காப்பீட்டுத் திட்டமாகும். இது குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு விபத்து மரணம் மற்றும் ஊனத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டால் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை இத்திட்டம் உறுதி செய்கிறது, அவசர காலங்களில் முக்கியமான நிதி உதவியை வழங்குகிறது.

இதன் மூலம் உங்களுடைய வீட்டின் உதவியாளர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க நீங்களும் உதவி செய்ய முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+