மோடி அரசின் ரூ.500 கோடி திட்டம் இன்று முதல் துவக்கம்.. யாருக்கெல்லாம் நன்மை..?!

சென்னை: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசின் கனரக தொழில் துறை அமைச்சகம் புதிய திட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. FAME II திட்டம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திட்டத்தின் அறிவிப்பு வெளியாகி ஆட்டோமொபைல் துறையை குஷிப்படுத்தியது.

சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான EMPS 2024 என்ற புதிய திட்டம், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை மாத இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும். இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட "FAME" (FAME - Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) திட்டத்தின் இரண்டாம் கட்டம், மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்தது.

மோடி அரசின் ரூ.500 கோடி திட்டம் இன்று முதல் துவக்கம்.. யாருக்கெல்லாம் நன்மை..?!

ஃபேம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள், மார்ச் 31ம் தேதி வரை அல்லது நிதி இருப்பு தீரும் வரை விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்குக் கிடைக்கும் எனக் கனரக தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் EMPS 2024 திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது.

புதிய EMPS 2024 திட்டம்: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பதற்காக, கனரக தொழில் துறை அமைச்சகம் "எலக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பு திட்டம் 2024" (EMPS 2024) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் இரு-சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10,000 வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 3.33 லட்சம் எலக்ட்ரிக் இரு-சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் ஆட்டோ மற்றும் எலக்ட்ரிக் கார்ட் போன்ற சிறிய எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 வரையும், பெரிய எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 41,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டம், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையைக் குறைத்து, அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பது முக்கிய நோக்கமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கவும் முடியும்.

எலக்ட்ரிக் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியம். மேலும் வாகனத்தை வாங்குவதற்கு முன்பு EMPS 2024 திட்டத்தில் மானியம் பெறுவது குறித்து முழுமையாக தெரிந்துக்கொண்டு வாங்குவது உத்தமம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+