10நிமிட டெலிவரி-க்கு மூடுவிழா.. என்ன காரணம்..? பிளிங்கிட், ஸ்விக்கி, ஜோமேட்டோ, ஜெப்டோ-வுக்கு பறந்த உத்தரவு..!

இந்திய ரீடைல் வர்த்தகத்தை தலைகீழாக மாற்றியதற்கான முக்கிய பங்கு குவிக் காமர்ஸ் நிறுவனங்களை தான் சாரும். மக்கள் இயல்பாக மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் நடைமுறையை மேலும் எளிதாக்கும் முயற்சியாக குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் வீட்டின் வாசலில் டெலிவரி செய்ய துவங்கியது. இது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்த காரணத்தால் இத்துறை நிறுவனங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.

இந்த வளர்ச்சி, போட்டி காரணமாக ஒவ்வொரு நிறுவனம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிட டெலிவரி என்ற சேவையை கொண்டு வந்தது. இது மக்களுக்கு நன்மையாக இருந்தாலும் டெலிவரி ஊழியர்களுக்கு பெரும் அபத்தாக மாறியது, டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது.

10நிமிட டெலிவரி-க்கு மூடுவிழா! என்ன காரணம்? பிளிங்கிட், ஸ்விக்கி, ஜோமேட்டோ, ஜெப்டோ-வுக்கு உத்தரவு

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது முன்னணி குவிக் காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்கிட், ஸ்விக்கி, ஜோமேட்டோ, ஜெப்டோ போன்றவை 10 நிமிட டெலிவரி என்ற விளம்பரத்தை நிறுத்துமாறும், இச்சேவையை தடை செய்யுமாறு மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார்.

சமீபத்தில் டெலிவரி ஊழியர்களின் போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட்ட நிலையில், டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு முதன்மையானது என்று அமைச்சர் மன்சுக் மண்டவியா இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இன்று மன்சுக் மண்டவியா குவிக் காமர்ஸ் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசும் போது, ஒரு ஆர்டரின் டெலிவரி நேரத்தை குறைப்பதால் டெலிவரி ஊழியர்கள் வேகமாக செல்ல வேண்டியிருப்பது அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருப்பதாக குறிப்பிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பிள்ங்கிட் தளத்தில் 10000+ பொருட்கள் 10 நிமிடத்தில் டெலிவரி என்று இருந்து டேக்லைன், தற்போது 30000+ பொருட்கள் வீட்டு வாசலில் டெலிவரி என்ற மாற்றப்பட்டு உள்ளது.

டிசம்பர் 25, டிசம்பர் 31ஆம் தேதிகளின் நாட்டின் முக்கிய நகரங்களில் கிக் ஊழியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் சம்பள உயர்வு, சமூக பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து டெலிவரி ஊழியர்கள்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் இனி எந்தொரு நிறுவனமும் 10 நிமிட டெலிவரி என்ற கட்டுப்பாட்டை சேவை செயல்படுத்த கூடாது, அதோடு இது தொடர்பான எவ்விதமான விளம்பரமும் செய்ய கூடாது என அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு சட்டம்
2020ஆம் ஆண்டு சமூக பாதுகாப்பு சட்டம் (Code on Social Security) கிக் மற்றும் டெலிவரி பிளாட்ஃபார்ம் ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த மாத தொடக்கத்தில் தொழிலாளர் அமைச்சகம் நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கான வரைவு விதிகளை வெளியிட்டது. இதில் கிக் மற்றும் டெலிவரி பிளாட்ஃபார்ம் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சுகாதாரம், தொழில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது. இந்த சட்டத்தை மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை டெலிவரி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டும் அல்லாமல் வேகமாக வாகனக்தை ஓட்டும் டெலிவரி ஊழியர்கள் மூலம் ஏற்படும் விபத்துக்களும் தவிர்க்க முடியும். மேலும் தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா-வின் அறிவிப்பு டெலிவரி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+