இந்தியா கிரிக்கெட் ரசிகர்களின் உயிர் நாடியாக இருக்கும் ஐபிஎல் போட்டியின் அடுத்த சீன் துவங்க உள்ள நிலையில், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருந்த ஒரே கேள்வி இந்த சீசனிலாவது தோனி விளையாடுவாரா என்பது தான்.
எம்எஸ் தோனி கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடாதது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதேபோல் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி 8வது இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

2027 ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் நடக்க இருக்கும் வேளையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்படும் அணி வீரர்களின் பட்டியலை வெளியிடத் தயாராகி வரும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய அப்டேட்-ஐ இன்று வெளியிட்டு உள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதிலிருந்து எம்எஸ்.தோனி ஓய்வு பெறுகிறார் எனவும், தோனியை அணியில் இருந்து விடுவிப்பதாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அறிவித்துள்ளது. இதோடு தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு முழுமையாக வெளியேறாமல் அணியின் மென்டாராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தோனிக்கும், சிஎஸ்கே அணிக்குமான பந்தம் மிகப்பெரியது, 2008ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் மட்டுமே தோனி விளையாடியுள்ளார். 2016, 2017 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்குத் தடை செய்யப்பட்டதால், அப்போது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடினார் தோனி. இதைத் தவிர்த்து ஆரம்பம் முதல் இறுதி வரையில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடு தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார்.
இந்த 19 சிசனில் 2 சிசன் போக மொத்தம் 17 சீசனில் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே, 5 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டும் எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா..? 19 சிசனில் விளையாடியதற்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையைச் சம்பாதித்துள்ளார். இதைத் தாண்டி விளம்பரம், பிராண்ட் அம்பாசிட்டர் ஒப்பந்தம் என பல வகையில் சம்பாதித்துள்ளார்.
எம்எஸ் தோனி தனது ஆரம்ப ஐபிஎல் போட்டிகளில் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், கடந்த 2 சீசனாக Uncapped வீரராக தலா 4 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த 19 சீசனில் தோனியின் சம்பளம் அதிகப்படியாக 15 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
| வருடம் | அணி | சம்பளம் |
| 2026 | சிஎஸ்கே | 4 கோடி ரூபாய் |
| 2025 | சிஎஸ்கே | 4 கோடி ரூபாய் |
| 2024 | சிஎஸ்கே | 12 கோடி ரூபாய் |
| 2023 | சிஎஸ்கே | 12 கோடி ரூபாய் |
| 2022 | சிஎஸ்கே | 12 கோடி ரூபாய் |
| 2021 | சிஎஸ்கே | 15 கோடி ரூபாய் |
| 2020 | சிஎஸ்கே | 15 கோடி ரூபாய் |
| 2019 | சிஎஸ்கே | 15 கோடி ரூபாய் |
| 2018 | சிஎஸ்கே | 15 கோடி ரூபாய் |
| 2017 | RPSG | 12.5 கோடி ரூபாய் |
| 2016 | RPSG | 12.5 கோடி ரூபாய் |
| 2015 | சிஎஸ்கே | 12.5 கோடி ரூபாய் |
| 2014 | சிஎஸ்கே | 12.5 கோடி ரூபாய் |
| 2013 | சிஎஸ்கே | 9.57 கோடி ரூபாய் |
| 2012 | சிஎஸ்கே | 8.74 கோடி ரூபாய் |
| 2011 | சிஎஸ்கே | 8.16 கோடி ரூபாய் |
| 2010 | சிஎஸ்கே | 6.88 கோடி ரூபாய் |
| 2009 | சிஎஸ்கே | 7.32 கோடி ரூபாய் |
| 2008 | சிஎஸ்கே | 6.03 கோடி ரூபாய் |


Click it and Unblock the Notifications
