ஜென்சன் ஹுவாங் CEO பதவி காலி.. 2 கள்ள உறவு.. என்விடியா நிறுவனத்தில் வெடித்த பூகம்பம்!

ஏஐ துறைக்கு சிப் சப்ளை செய்வது மட்டும் அல்லாமல் ஸ்டார்கேட் திட்டம் தொடர்பான மிகப்பெரிய முதலீட்டு வளையத்திலும் என்விடியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில் Nvidia சிஇஓ ஜென்சன் ஹுவாங் 2 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்த சம்பவம் ஒட்டுமொத்த ஏஐ துறைக்கும் சிக்கலாக மாறியுள்ளது.

சீன பெண் உளவாளி ஆலீஸ் ஹுவாங் மற்றும் என்விடியா ஹெல்த்கேர் பிரிவின் தலைவரான கிம்பர்லி பவல் ஆகிய 2 பெண்களுடன் என்விடியா சீஇஓ ஜென்சன் ஹுவாங் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவில் இருந்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஜென்சன் ஹுவாங் CEO பதவி காலி.. 2 கள்ள உறவு.. என்விடியா நிறுவனத்தில் வெடித்த பூகம்பம்!

இந்த நிலையில் என்விடியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாக குழுவும் ஜென்சன் ஹுவாங் நிறுவனத்தை சிஇஓ பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

ஜென்சன் ஹுவாங், தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து நீக்குவது என்பது கார்ப்ரேட் துறையில் மிகவும் முக்கியமான விஷயமாகும். இதேபோல் ஜென்சன் ஹுவாங்-ஐ சிஇஓ பதவியில் இருந்து நீக்கினால் 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும் வெற்றிடம் உருவாகும்.

Also Read

30 வருடமாக ஒரு நிறுவனத்தை பெரும் பின்புலம் இல்லாமல் படிப்படியாக உயர்த்தி இன்று ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அடித்தளமாகவும், இத்துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் உள்ளார் ஜென்சன் ஹுவாங்.

புதன்கிழமை கிம்பர்லி பவல் உடனான கள்ள உறவு குறித்த செய்தி வெளியான பின்பு என்விடியா பங்குகள் சந்தை மூடப்பட்ட பின்பு சுமார் 8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஆலீஸ் ஹுவாங் உடனான உறவு குறித்த தகவல் வெளியான பின்பு என்விடியா நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்பு இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 600 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.

Recommended For You

இதேபோல் ஜென்சன் ஹுவாங் நீக்கிய பின்பு இந்த இடத்தில் யாரை உட்கார வைக்க முடியும் என்ற கேள்விக்குப் பல பதில்கள் இருந்தாலும், உறுதியான பதில் இன்னும் என்விடியா நிர்வாகத்திற்குக் கிடைக்கவில்லை.

காரணம் ஜென்சன் ஹுவாங் வெறும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ, நிறுவனர் மட்டும் அல்லாமல் அதன் முகமாகவும், பிராண்ட் ஆகவும் உள்ளார். ஜென்சன் ஹுவாங்-ன் கருப்பு லெதர் ஜாக்கெட் என்விடியா சிஇஓ-வின் அடையாளமாகவே விளங்குகிறது.

ஜென்சன் ஹுவாங் CEO பதவி காலி.. 2 கள்ள உறவு.. என்விடியா நிறுவனத்தில் வெடித்த பூகம்பம்!

இதனால் ஜென்சன் ஹுவாங்-ஐ உடனடியாக நீக்குவது என்பது பெரும் சிக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது, மேலும் ஆலீஸ் ஹுவாங் உடனான உறவை ஒப்புக்கொண்ட ஜென்சன், கிம்பர்லி பவல் உடனான கள்ள உறவு குறித்து இதுவரையில் எவ்விதமான பதிலும், விளக்கமும் தெரிவிக்கவில்லை.

இதேபோல் ஜென்சன் ஹுவாங் மனைவி லோரியும் இதுவரையில் விவாகரத்து குறித்தோ அல்லது திருமணத்திற்கு மீறிய 2 உறவு குறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+