சியோமி, ஹூவாய், பாக்ஸ்கான் என சமீபத்தில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது, ஆனால் டெஸ்லா வந்த புதியதில் மெகா திட்டம் போட்ட ஆப்பிள் இன்று வரையில் ஓரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம், 10 வருடங்களுக்கும் அதிகமாக செயல்படுத்தி வந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தை மொத்தமாக கைவிட்டுள்ளதாக, ரிட்டர்ஸ் தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஹூண்டாய் உடனும், பாக்ஸ்கான் உடனும் இணைந்து கார் தயாரிக்கும் திட்டம் குறித்து பேசி வந்தது.

இதை தொடர்ந்து எலக்ட்ரிக் கார் திட்டத்தில் பணியாற்றிய பல ஊழியர்கள், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
இது உண்மையாக இருந்தால், ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும். இது முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் முயற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் போட்டியிடும் திறன் அதிகரிக்கும். கடந்த 5 வருடத்தில் ஆப்பிள் AI துறையில் பல நிறுவனங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள், குறிப்பாக ஆல்பாபெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதன்மை பங்கு வகிக்கின்றன. ஆனால், ஆப்பிள் இதுவரை செயற்கை தொழில்நுட்பத்தில் பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா உட்பட பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், முதலீடுகளை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். சிலர் முழுவதுமாக பேட்டரி மூலம் இயங்கும் கார்களுக்கு பதிலாக ஹைப்ரிட் கார்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு ʼʼProject Titanʼʼ என்று பெயரிட்டது. சுயமாக ஓட்டும் வாகனங்களில் ஆர்வம் அதிகரித்தபோது, ஒரு தசாப்தம் முன்னர் இந்த திட்டத்தை தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டிலேயே வாகனத்தை வெளியிடுவதைப் பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
கொரோனா தொற்று காலத்தில் self-driving EV வாகன திட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தான் 190 பேரை இப்பிரிவு பணியில் இருந்து அகற்றியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications