இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு காலத்தில் பிரபலமான நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் மோசமான வர்த்தகம், போட்டியை சமாளிக்க முடியாத நிலை, அதிகப்படியான கடன் என பல பிரச்சனைகளால் மாட்டிக்கொண்டு தவித்து வந்த நிலையில் ஒரு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ்-ஐ கைப்பற்ற முன் வந்தது. ஆனால் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரும் சோகத்தை ரீடைல் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 7 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ஜலன் கலரோக் கன்சோர்டியத்தின் கையகப்படுத்துதல் முயற்சியை நிராகரித்து, நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யவும், திவாலாக அறிவித்து, நிறுவனத்தை களைக்க உத்தரவிட்டது.

இதன் மூலம், ஜெட் ஏர்வேஸ் மீண்டு வரும் என கிட்டத்தட்ட ஒரு வருடமாக நம்பியிருந்த ரீடைல் முதலீட்டாளர்களின் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது.
ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் திவாலாக அறிவித்து, விற்பனை செய்ய முடிவு செய்த போது Jalan Kalrock கூட்டணியில் திட்டம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இந்த கைப்பற்றலுக்கான நிதியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறியதால் தற்போது உச்ச நீதிமன்றம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் களைத்து விட உத்தரவிட்டது.
ஜெர் ஏர்வேஸ் மீண்டு வரும் என நம்பி இருந்த சுமார் 1.43 லட்சம் சில்லறை முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் உள்ள தங்கள் முதலீட்டை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, சில்லறை பங்குதாரர்கள் ஜெட் ஏர்வேஸில் 19.29% பங்கை வைத்திருந்தனர். இதன் மதிப்பு தற்போதைய சந்தை மூலதன மதிப்பில் சுமார் ரூ. 74.6 கோடியாகும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்பு ஜெட் ஏர்வேஸின் பங்கு விலை மும்பை பங்குச்சந்தையில் லேவர் சர்கியூட் அளவில் முடங்கி ரூ.34.16 விலைக்கு முடிந்துள்ளது, நாளை தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் ஜெட் ஏர்வேஸ் 2023ல் Jalan Kalrock கூட்டணி தனது விருப்பத்தைத் தெரிவித்துத் தேர்வு செய்யப்பட்டது. 2024ல் நிறுவனம் களைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications