நெதன்யாகுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரபு கட்சிகள்.. கூட்டணிக்கு ரெடி! இஸ்ரேல் வரலாற்றில் புதிய திருப்பம்!

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் அதிரவைத்த நிலையில், ஈரான் மீதும், காசா, வெஸ்ட் பேங்க்-ல் பெரும் தாக்குதலை நடத்தி வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவுகட்ட, எப்போதும் இல்லாத நிலைப்பாட்டை இஸ்ரேல் நாட்டின் அரபு கட்சிகள் எடுத்துள்ளது.

இஸ்ரேலில் தற்போது 2 யூத கட்சி கூட்டணிகள், 1 அரபு கட்சி கூட்டணிகள் உள்ளது. இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பதில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

நெதன்யாகுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரபு கட்சிகள்..  கூட்டணிக்கு ரெடி! இஸ்ரேல் வரலாற்றில் புதிய திருப்பம்!

இந்த நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து இறக்கவும், அதிகாரத்தில் இருந்து இறக்கவும் யூதக் கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அரபு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அகமது திபி, ஏபி பத்திரிக்கைகக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் இருக்கும் அரபு கட்சிகள் மொத்த கூட்டணி தான் இந்த ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி, இக்கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவரான அகமது திபி வெளியிட்டுள்ள அறிவிப்பு இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read

பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் 19 இடங்களை வென்ற ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி யூத கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தயார் என அறிவித்துள்ளது மூலம், எதிர்கட்சிகளுக்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.

இதனால் யாஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் ராணுவத்தின் முன்னாள் தளபதியுமான காடி ஐசென்கோட் 48 இடங்களை வெற்றுள்ள நிலையில், 19 இடங்களை வென்ற ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி உடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும். மேலும் இது காடி ஐசென்கோட் முதல் முறையாக பிரதமர் பதவிக்காக போட்டியிடும் காரணத்தால் இது மிக முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகிறது.

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக புதிய அரசு அமைந்தால், அதற்கு ஆதரவு அளிக்க ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி தயாராக உள்ளதாகவும், நேரடியாக இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க விரும்புவதாகவும் அகமது திபி தெரிவித்துள்ளார்.

Recommended For You

இதன் மூலம் யூதக் கட்சிகளுடன் நேரடியாகக் கூட்டணி அமைக்க வேண்டிய அரசியல் சிக்கலைத் தவிர்க்கப்படுவது மட்டுமல்லாமல், பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து இறக்கவும், அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும் என்பதில் அரபு கட்சிகள் உறுதியாக இருப்பது தெரிகிறது.

இதேபோல் இந்த மறைமுக ஆதாரவு மூலம் புதிய அரசின் முடிவுகளிலும் ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் இத்தகைய கூட்டணி திட்டம் இரு தரப்புக்கும் ஆட்சி காலம் முழுவதும் பெரும் நெருக்கடியாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஏனென்றால்வ வெஸ்ட் பேங்க் பகுதியில் நடக்கும் இஸ்ரேலின் குடியேற்ற விவகாரம், காசா மீதான தாக்குதல் போன்றவற்றில் புதிய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது.

இதைவிட முக்கியமாக இஸ்ரேலுக்கும், ஒட்டுமொத்த யூதர்களுக்கும், இஸ்ரேல் நாட்டை ஒரு யூதர்களுக்கான நாடாக அங்கீகரிக்கும் விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களை கொண்ட ஜாயின்ட் லிஸ்ட் உடனான கூட்டணி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

இதனால் இஸ்ரேலில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் பெரும் குழப்பம் இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+