இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக மாறி வரும் வேளையில் இதற்கான உள்கட்டமைப்பு, சப்ளை செயின், வேகமான டெலிவரி ஆகியவற்றை வேகமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
இதை உணர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10000 கோடி ரூபாய் மதிப்பிலான கண்டெய்னர் உற்பத்தி உதவி தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே கண்டெய்னர் தயாரிப்புக்கான சூழலை உருவாக்கி காலி கண்டெய்னர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை மொத்தமாகத் தவிர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டு 20 லட்சம் காலி கண்டெய்னர்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் சூழல் தான் தற்போது இருந்து வருகிறது.
இந்த தட்டுப்பாடு தான் தற்போது முக்கிய வர்த்தகமாக மாறியிருக்கும் வேளையில் நாட்டின் சப்ளை செயினை வேகப்படுவதுவும், மேம்படுத்தும் பொருட்டு Container Manufacturing Assistance Scheme (CMAS) என்னும் 10000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் முதல் 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலக்கட்ட ஆலோசனைக்கு பின்பு மோடி அரசு இத்திட்டத்தை உருவாகி அறிமுகம் செய்துள்ளது.
10000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் புதிய கண்டெய்னர் உற்பத்தி நிறுவனங்கள், ஏற்கனவே இருக்கும் கண்டெய்னர் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யும் தொழிற்சாலைகள், இதை தாண்டி டெஸ்டிங், திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. இதை விட முக்கியமான விஷயம் இத்துறையில் இருக்கும் சீனாவின் ஆதிக்கம்.
அதாவது, உலகில் தயாரிக்கப்படும் 90 -97 சதவீதம் அளவிலான கண்டெய்னர்கள் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. இதனால் உலகமே சீனாவை நம்பி தான் தனது ஏற்றுமதி வர்த்தகத்தை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
குறிப்பாக கொரோனா காலத்தில் காலி கண்டெய்னர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் கூடுதல் தொகை, கூடுதல் செலவுகளைச் செய்து உலகின் மறுமுனையில் இருந்து காலி கண்டெய்னர்களை பெற்று ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது.
இத்தகைய நிலை இனி வரக்கூடாது என்பதற்காக இந்தியா 10000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி உடைய நிறுவனங்களுக்கு 859 கோடி ரூபாய் அளவிலான தொகையை வெறும் 3 சதவீத வட்டியில் கடன் கொடுப்பதற்காகவே ஒதுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
