இன்று பல கார்ப்பரேட் ஊழியர்கள் எப்படா வீட்டுக்கு போவோம் என்பதை விட எப்போடா மாதம் சம்பளத்தை விட்டு விட்டு சொந்த தொழில் துவங்கும் என்ற எண்ணத்தில் தான் அதிகமானோர் உள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் வர்த்தகம் பலருக்கும் பல வர்த்தக வாய்ப்புகளை திறந்துள்ளது, இதனால் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சில வருடத்தில் கைநிறைய சம்பாதிக்க முடியும் என்பது உறுதி. இதனாலேயே இன்று தலைமுறையினரிடம் அதிகப்படியான தொழில்முனைவோருக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதில் ஒரு ஜோடி தான் இன்ஜினியர் பட்டதாரிகளான மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர், 2017ல் இன்ப சுற்றுலா செல்ல முடிவு செய்து லீவ் கிடைக்காமல் பல முறை ஒத்திவைக்கப்பட்டு இந்தோனேஷியாவின் பாலி-க்கு சென்றுள்ளனர். ஜாலி டிரிப்-ஆக திட்டமிட்டப்பட்டாலும், இவர்களுடையை வாழ்க்கையை புரட்டிப்போட்டு உள்ளது.
மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர் பாலி-க்கு சுற்றுலா செல்லும் போது 2017ல் Block Printing எனப்படும் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆனால் அதிகளவில் பயன்படுத்தாமல் மறைந்து போன ஒரு நெசவு கலை இந்தோனேஷியா முழுவதும் பிரபலமாக இருந்ததை உணர்ந்தனர்.
இது மட்டும் அல்லாமல் block printing செய்யப்பட்ட ஆடைகள், பிற நெசவு பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளில் இந்த கலை குறித்து அதிகப்படியான விபரங்கள், வரலாறுகள், பெருமையாக பேசியதை மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர் கவனித்தனர். இந்தியாவில் இதை கலை மறைந்து வருவதையும் உணர்ந்தனர்.
இதை மீட்டு எடுப்பது மட்டும் அல்லாமல் இக்கலையை சார்ந்து இருப்பவர்களுக்கு அதிகப்படியான வர்த்தகம், வருமானம் அளிக்க வேண்டும் என முக்கிய இலக்குடன் மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர் இருவரும் தங்களுடைய 10 வருட கார்பரேட் வேலையை, ஒவ்வொரு மாதமும் கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு 2019ல் RAAMAE என்ற பிராண்டை துவங்கினர்.
முதல் வெறும் 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட RAAMAE பிராண்டில் எவ்விதமான நச்சு தன்மை கொண்ட பொருள்களை தயாரிக்க கூடாது என முடிவு செய்து இதையும், பாரம்பரிய கலை என்பதை USP ஆக கொண்டு வர்த்தகத்தை துவங்கினர் மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர் ஜோடி.

முதலில் RAAMAE பிராண்ட் quilts மற்றும் cushion cover-களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்த நிலையில் இன்று bedsheets, pillowcases, baby clothing, accessories, pouches, purses மற்றும் tote bags என 60க்கும் அதிகமாக பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
4 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய வர்த்தகத்தின் மூலம் தற்போது மாதத்திற்கு சுமார் 18 லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டுகின்றனர் இந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஜோடி. இது மட்டும் அல்லாமல் RAAMAE பிராண்ட் தயாரிப்புகள் ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மைசூர், கோவா, கேரளா, இம்பால், அசாம் மற்றும் மிசோரம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் அமெரிக்கா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications