இன்று ஐடி, டெக், உற்பத்தித் துறையில் பணியாற்றிப் பலர் கார்பரேட் வேலை பிடிக்காமல் மாறுபட்ட வாழ்க்கையைத் தேடி விவசாயத்திற்குள் நுழைந்து வருகிறார்கள். விவசாயத்தில் புதிய வாழ்க்கை, வர்த்தகம், வருமானத்தை உருவாக்கத் திட்டமிட்டு விவசாய நிலத்திலும், விவசாயத்திலும் முதலீடு செய்து தோற்றுப்போன கதை ஏராளமாக உள்ளது.
பிற துறையில் இருந்து விவசாயத் துறைக்கு வருபவர்கள் பெரும்பாலான இடத்தில் தோல்வி அடைவது முன் அனுபவம் இல்லாமல் இறங்குவது தான். ஆனால் இங்கு ஒருவர் சரியான முறையில் திட்டமிட்டு இனிஜினியராக இருந்து தனது நிலையான மாத சம்பள பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் போதுமான அனுபவம் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். இதன் மூலம் தென்னை வளர்ப்பில் 0% வேஸ்ட் என்ற புதிய பார்மூலா-வை உருவாக்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் 30 வயதான மது கர்குண்ட் என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாகத் தனது குடும்பத்திடம் தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், எட்டு ஆண்டுகளாக இன்ஜினியரிங் துறையில் பணியாற்றி வருவதால், இந்த முடிவு அவரது குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிலையான மாத சம்பளத்தை விட்டுவிட்டு விவசாயத்திற்குள் வருவது குறித்துப் பேசுகையில் மது கர்குண்ட் நான் ஒரு விவசாயியின் மகன், பயிர் சேதம், குறைந்த லாபம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் விவசாயிகள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் தேங்காய்களை உற்பத்தியை முழுமையாகச் சந்தையின் விற்பனை பொருளாக மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு அதிக லாபம் ஈட்ட உதவ முயல்கிறேன் என்று பெருமையுடன் கூறுகிறார்.

மது கர்குண்ட் பெங்களூரில் உள்ள தனது டெங்கின் (Tengin) என்ற தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் இதைச் செய்கிறார். பொறியியலாளராக இருந்து விவசாயியாக மாறிய மது கர்குண்ட் சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பர்பி, சோப்புகள், மெழுகுவர்த்திகள், சர்க்கரை, சிப்ஸ், கிராக்கரி ஷெல்ஸ், கொயர் டிஷ் ஸ்க்ரப்பர்கள் எனப் பலவற்றைத் தென்னை மர வளர்ப்பில் இருந்து உருவாக்கி விற்பனை செய்கிறார்.
இந்தக் கட்டமைப்பு மூலம் மது கர்குண்ட் மாதம் ரூ.4 லட்சம் வரை எளிதாகச் சம்பாதிக்கிறார். மது கர்குண்ட்-வின் தயாரிப்புகளில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது, அது என்னவென்றால், தேங்காயின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தி, கிட்டத்தட்ட எதுவும் வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்வது மூலம் ஜீரோ வேஸ்ட் பார்மூலா-வை உருவாக்கி தென்னை விவசாயிகளுக்குப் புதிய பாதையை உருவாக்கியுள்ளார்.

இன்றளவும் மது கர்குண்ட்-வின் பணி அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை எனக் கூறும் அவர். எந்தொரு விவசாயியும், தனது மகனை விவசாயத் துறைக்குள் கொண்டு வர விரும்பமாட்டான் எனத் தனது தந்தை கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
மது கர்குண்ட் தனது ஸ்டார்ட்அப் நிறுவனமான டெங்கின் (Tengin) மூலம் அவருடைய கிராமத்தில் இருக்கும் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு உதவுகிறார். மேலும் டெங்கின் (Tengin) மூலம் கர்நாடகா மற்றும் கோவா-வில் சுமார் 20 விவசாயிகளை இணைத்துள்ளார் மது கர்குண்ட்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications