இன்றெல்லாம் படித்த பட்டதாரிகள் வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிப்பது தொடர்பான ஐடியாக்களை தினம் தினம் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதை சிலர் செயல்படுத்தி சாதித்தும் காட்டியுள்ளனர். அப்படிப்பட்ட வெற்றிக் கதைகள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் தங்கள் வீட்டின் தரிசு நிலத்தைப் பயன்படுத்தி ஒருவர் பல லட்சங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் அப்படி என்ன செய்கிறார்? எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது? என்பது குறித்து பார்ப்போம்.
அன்ஷுல் மிஸ்ரா என்ற நபர் சென்னையில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு தன் சொந்த ஊரில் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினார். உத்தர்பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் சிலஹுவா கிராமத்தில் வசிக்கும் தன் குடும்பத்திற்கு சொந்தமான தரிசு நிலத்தை பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார்.

அப்படி தேடிய அன்ஷுலுக்கு கிடைத்த ஒரு ஐடியா தான் டிராகன் பழ விவசாயம். இவருக்கு யோசனை தோன்றிய போது தான் இளஞ்சிவப்பு நிற டிராகன் பழங்கள் பிரபலம் அடையத் தொடங்கியது. இந்த பழங்களுக்கு அதிக தேவை இருந்தாலும் வட இந்தியாவில் இதன் உற்பத்தி குறைவாகவே இருந்தது. இந்த நேரத்தில் தான் அன்ஷுல் தான் சரியான விவசாயத்தை கண்டுபிடித்ததை உணர்ந்தார்.
அதன்பிறகு அக்டோபர் மாதம் 2018-ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 1600 இளஞ்சிவப்பு நிற வியட்னாமிய ரெட் டிராகன் பழ மரக்கன்றுகளை வாங்கினார். மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள ஒரு இடத்தில் இருந்து 1 மரக்கன்றை 50 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் அன்ஷுல் 1 ஏக்கர் நிலத்தில் கற்களை எல்லாம் அகற்றி விட்டு மாட்டுச்சாணத்தை நிரப்பினார். ஒரு ஏக்கரில் 2000 மரக்கன்றுகளை நட முடியும் என்றாலும், 1600 செடிகளை மட்டுமே அன்ஷுல் வாங்கியிருந்தார். இதை வழக்கமான வரிக்கு வரி இடைவெளி விட்டு நட்டுள்ளார். கற்றாழை குடும்பத்தை சேர்ந்தது தான் டிராகன் பழங்கள்.
எனவே இதற்கு அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படாது மற்றும் தரிசு நிலங்களிலும் கூட இவை வளரக்கூடியது. டிராகன் பழ விவசாயத்திற்கு முக்கியமாக தேவைப்படும் செலவு கான்கிரீட் தூண்களை அமைப்பதாகும். கற்றாழை கொடியாக இருப்பதால் வளர்ச்சிக்கு உகந்த தூண்கள் தேவை. இந்தத் தூண்கள் தான் செடிகளை தாங்கிப் பிடித்துக் கொள்ளும். ஒவ்வொரு தூணுக்கும் சுமார் 300 முதல் 350 ரூபாய் வரை செலவாகும். 1 ஏக்கருக்கு 500 தூண்கள் வரை தேவை. அப்படி பார்த்தால் இதற்கு மட்டுமே ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.1.75 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
அதோடு தொழிலாளர்களுக்கான செலவு, உரம் போன்றவற்றுடன் சேர்த்து ஆரம்ப முதலீடாக ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3.2 லட்சம் வரை செலவாகலாம். மே மாதம் 2020-ஆம் ஆண்டில் அன்ஷூல் முதல் முறையாக அறுவடை செய்து அதிலிருந்து ரூ.1 லட்ச ரூபாய் சம்பாதித்தார். மற்ற எல்லாப் பழங்களையும் போலவே முதல் ஆண்டு அறுவடை செய்யும் போது மகசூல் குறைவாகவே இருந்துள்ளது. டிராகன் பழ செடிகள் மே முதல் வாரத்தில் துளிர்விடத் தொடங்கி, ஜூன் மாதம் அறுவடைக்குத் தயாராகும். கடைசி அறுவடை டிசம்பரில் முடியும்.
டிராகன் பழச் செடிகளை சுத்தம் செய்வது, கையால் உழுதல் மேலும் ஆண்டு பராமரிப்பு செலவுகள் போன்றவை சேர்த்து ஏக்கருக்கு ரூ.50,000 வரை ஆகலாம். இந்த செலவுகளை கழித்து ஒரு ஏக்கருக்கு ஆண்டு லாபமாக ரூ.4 லட்சம் வரை கிடைக்கும் என்கிறார் இந்த டிராகன் பழ விவசாயி.
இவரது அறுவடை உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூர், பரேலி மற்றும் ஃபரூக்காபாத் ஆகிய இடங்களில் விற்கப்படுகிறது. அன்ஷூலிடம் இரண்டு பசுக்களும் உள்ளன. அவற்றின் சாணம் மற்றும் சிறுநீரை தாவரங்களுக்காக பயன்படுத்துகிறார். மாட்டு சாணத்தோடு தங்கள் பண்ணைக்கு தேவைப்படும் உரத்தை இவரே தயார் செய்கிறார். இவருடைய மிகப்பெரிய வருமான ஆதாரம் அவருடைய நர்சரி வணிகம் ஆகும்.
கடந்த ஆண்டுகளில் இவருடைய வணிகம் மிகச்சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஆண்டு 42,000 மரக்கன்றுகளை விற்பனை செய்து ரூ.18 லட்ச ரூபாய் வரை லாபம் பெற்றுள்ளார். மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இவரிடம் டிராகன் பழ மரக்கன்றுகளை வாங்குகின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications