பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்று ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் அப்போதெல்லாம் மாணவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் கல்லூரி படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது தான் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரியவரும்.
இந்த நிலையில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி மாணவர் 12ஆம் வகுப்பில் தன்னுடைய மதிப்பெண் குறைந்ததால் எந்த பெரிய நிறுவனம் தன்னைநேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
12ஆம் வகுப்பு மதிப்பெண்
பொறியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் அவரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிடெக்
இது குறித்து அவர் மேலும் கூறும்போது 'துரதிர்ஷ்டவசமாக நான் 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்று விட்டேன், அது என்னுடைய தவறுதான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது நான் பிடெக் ஐடி இறுதி ஆண்டு படித்து வருகிறேன். பிடெக் படிப்பில் இதுவரை எனக்கு நல்ல சதவீத மதிப்பெண்கள் உள்ளன.
மதிப்பெண்கள்
இந்த நிலையில் எங்களுடைய கல்லூரிக்கு வேலைக்கு ஆள்கள் எடுக்க வரும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவர்களின் தகுதி அளவுகோல்கள் குறித்து பார்க்கும்போது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என்றும் பொறியியல் துறையில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நேர்காணல்
நான் 10ஆம் வகுப்பில் 85 சதவீதமும் இன்ஜினியரிங் படிப்பில் 75% பெற்றாலும் 12-ம் வகுப்பில் 54% மட்டும் பெற்றதால் நான் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலை தேடினாலும், எனது 12ஆம் வகுப்பு மதிப்பெண்ககளை பார்த்து என்னை நேர்காணலுக்கு அழைக்க மறுக்கின்றன.
பொறாமை
என்னுடைய வகுப்பு தோழர்கள் எல்லாம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவதை நான் பொறாமையுடன் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
வாத விவாதங்கள்
இவருடைய பதிவை பார்த்து கல்லூரி படிப்பு முடித்த மாணவர் ஒருவரின் 10ஆம்வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பது குறித்து வாத விவாதங்கள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் கருத்து
ஒரு இன்டர்நெட் பயனாளி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது 'என் சகோதரனுக்கும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது என்றும், 10ஆம் வகுப்பில் அவருக்கு மதிப்பெண் குறைவாக இருந்ததால் அவர் பல நிறுவனங்களுக்கு இன்டர்வியூ அழைக்கப்படவில்லை என்றும், இருப்பினும் தற்போது அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தை கண்டுபிடியுங்கள்
இன்னொரு நபர் இதுகுறித்து 'நீங்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம். எந்த நிறுவனமும் நேர்காணலின்போது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை ஒரு பிரச்சனையாக பார்க்காது. உங்கள் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பொருட்படுத்தாமல் உங்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனத்தை நீங்கள் கண்டுபிடியுங்கள்' என்று பதிவு செய்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications