குறைந்த முதலீட்டில் அதிகளவில் வருமானம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் உள்ளங்கை நெல்லிக்காய் எனலாம். காலங்காலமாக கிராமப்புறங்களில் செய்யப்படும் ஆடுவளர்ப்பு திட்டம்தான் நாம் இன்று காணவிருக்கும் தொழில் வாய்ப்பு.
நிறைய தொழில்களால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை ஏற்படுகின்றது. ஆனால் ஆடு வளர்ப்பு சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத அதேநேரத்தில் நிலத்துக்குத் தேவையான இயற்கை உரத்தையும் தரும் நல்லதொரு தொழிலாகும். ஆட்டின் சிறுநீர், புழுக்கை ஆகியவை பயிர் நிலத்துக்கு சத்துகளைத் தரும் இயற்கை உரமாகும்.

சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு ஆடு வளர்ப்பு கொழுத்த லாபத்தை ஈட்டித் தரும். உள்ளூருக்குள்ளேயே விற்று பணத்தை அள்ளி விடலாம். ஆட்டிறைச்சிக்கு எப்போது நல்ல டிமாண்ட் உள்ளது.
ஆடு வளர்ப்பு மூலம் மாதம் 2 லட்சம் ரூபாயை எளிதாக சம்பாதிக்கலாம்.
சிறிய முதலீட்டில் பல்வேறு விதமான வருமானத்தை ஆடு வளர்ப்பு மூலம் பெறலாம். இந்தியர்களுக்கு இது மிகவும் பழக்கப்பட்டத் தொழிலாகும். நீண்ட நெடுங்காலமாக மக்கள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பசுமாடு, எருமை வளர்ப்புக்குக்கூட நிறைய தண்ணீர் தேவை. ஆனால் ஆடு வளர்ப்புக்கு அந்தப் பிரச்னை இல்லை.
வீட்டிலிருந்தே இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம் என்பது இதில் உள்ள குறிப்பிட்ட சிறப்பம்சம் என்றாலும் மக்களின் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யும் நல்லதொரு தொழிலாக ஆடு வளர்ப்பு விளங்குகிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் இது விளங்குகிறது. இந்தத் தொழிலை மேற்கொள்வதற்கு பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. கணவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டால் வீட்டிலிருக்கும் மனைவியர் தாராளமாக இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.
ஹரியானாவில் ஆடு வளர்ப்பதற்கு அந்த மாநில அரசே கடனுதவி தருகிறது. அதிலும் கால்நடைத்துறை சார்பில் ஆடுவளர்ப்புக்கு 90 சதவீதம் மானியமும் தருகின்றனர். தமிழ்நாட்டிலும் கூட்டுறவு வங்கிகள், பல தேசிய வங்குகளில் கால்நடை வளர்ப்புக்கு தாராளமாக கடன் உதவி செய்கின்றனர்.

ஆடு வளர்ப்புக்கு உங்களது பகுதியின் தட்பவெப்ப நிலை மிக முக்கியம். நிலத்தின் சூட்டைப் பொறுத்து அங்கு நன்கு வளரக்கூடிய ரக ஆடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் பாக்கி. பொதுவாக செம்மறி ஆடு, வெள்ளாடு ஆகியவை தமிழ்நாட்டில் பரவலாக வளர்க்கப்படுகிறது. ஊட்டி போன்ற மலை பகுதிகள் குறும்பாடுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட சூழ்நிலை நிலவுவதால் ஆடு வளர்ப்புக்கு மிகவும் ஏற்றதாகும். ஆடு வளர்ப்பில் சராசரியாக மாதந்தோறும் சம்பாதிக்கக் கூடிய லாபம் குறித்து மேலோட்டமாகப் பார்ப்போம். உங்களிடம் 18 பெண் ஆடுகள் இருந்தால் மாதம் ரூ.2,16,000 சம்பாதிக்கலாம். அதே 18 ஆண் ஆடுகள் இருந்தால் மாதம் 1,98,000 சம்பாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications