இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) தனது இ கேட்டரிங் பிரிவின் மூலம் ரயில் பயணிகளுக்கு உணவுகளை வழங்குகிறது. இருப்பினும் தாங்கள் விரும்பும் உணவுகளை பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் ரயில் பயணிகளிடம் உள்ளது.
இனி அந்த கவலை ரயில் பயணிகளுக்கு இருக்காது. ரயில் பயணிகள் விரும்பும் உணவுகளை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ ரயில் பயணிகளுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவை வழங்க களம் இறங்குகிறது.

ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது பயணிகளுக்கு அவர்கள் விருப்பப்படும் உணவுகளை தேர்வு செய்யும் பரந்த வசதியை வழங்குவதற்காக சோமேட்டோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, சோமேட்டோ உதவியுடன் தனது இ கேட்டரிங் வலைதளம் வாயிலாக ரயில் பயணிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவுகளை பெறும் Proof of Concept என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி செயல்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக புதுடெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், இ கேட்டரிங் பிரிவில், ரயில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்தவற்கான தேர்வுகளின் வரம்பை விரிவுப்படுத்தும் நோக்கில் சோமேட்டோவுடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது.
இ கேட்டரிங் வலைத்தளம் வாயிலாக மூலம் முன்கூட்டி ஆர்டர் செய்த உணவுகளை வழங்குவதற்கும், டெலிவரி செய்வதற்கும் சோமேட்டோவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக புதுடெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி-சோமேட்டோ கூட்டணி முயற்சி காரணமாக ரயில் பயணிகளின் பயண அனுபவம் புதிதாகவும், வசதியாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications