பிளிங்கிட் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றெல்லாம் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். ஆடைகள், காலணிகள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தங்களுடைய அளவு தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சிலர் தங்களை விட பெரிய அளவிலான காலணிகளை ஆர்டர் செய்து அவற்றை ரிட்டன் செய்வது குறித்து யோசிக்கின்றனர். இதற்காகத்தான் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரி இல்லாத பொருட்களை 10 நிமிடங்களுக்குள் ரிட்டன் செய்யும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிளிங்கிட் டெல்லி என்சிஆரில் வெற்றிகரமாக இதை சோதனை செய்தது. தற்போது அடுத்த கட்டமாக மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சேவை பிற நகரங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிங்கிட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் திண்ட்சா, சமூக ஊடகங்களில் புதிய சேவை குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார். "ஒரு கோரிக்கையை அனுப்பிய 10 நிமிடங்களில் ரிட்டர்ன் பெற்றுக்கொள்ளப்படும். நாங்கள் இதை டெல்லி என்சிஆர் பகுதியில் சோதித்து வருகிறோம், இப்போது மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் இதை வழங்கியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.
ஆன்லைனில் ஆடைகள் மற்றும் காலணிகளை ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பொதுவான கவலை சைஸ் பற்றிய கவலைதான். இந்த கவலையை போக்கும் விதமாக இந்த அம்சம் அமைக்கப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளங்கள் மக்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. அதை சரி செய்யும் பொருட்டு தற்போது பிளிங்கிட் 10 நிமிடங்களில் ரிட்டன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த இ-காமர்ஸ் தலங்கள் தங்களுடைய வணிகத்தை மேம்படுத்தி வருகின்றனர். மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு அப்பால் தங்கள் சலுகைகளையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற நிறுவனங்களும் வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் என தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றனர்.
இப்போது Adidas, Pepe, FabIndia, Jockey, Boldfit, XYXX, US Polo Association, Paragon மற்றும் Liberty போன்ற நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் பல்வேறு தயாரிப்புகளையும் இந்தத் தளங்கள் வழங்குகின்றன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications