அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் வரி விதிப்பு செல்லாது என அந்நாட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் வேளையில், சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்திய ஆட்டோமொபைல் துறையை புரட்டிப்போட்டு உள்ளது.
அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போரின் போது, ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன அரசு அரிய உலோகத்தால் செய்யப்பட்ட காந்தம் வெளிநாடுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்வதை தடை செய்வதாக அறிவித்தது.

அப்படி சீனாவிடம் இருந்து அரிய உலோக தாது மற்றும் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் சீன அரசிடம் தனிப்பட்ட முறையில் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை முன்வைத்தது. இந்த அறிவிப்பால் இந்தியாவும் பாதிக்கப்பட்டு உள்ளது
முக்கிய பொருள்: சீனாவின் இந்த உத்தரவு நியோடைமியம் (Neodymium) காந்தங்களின் இந்திய ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளதால், இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனத் துறை மற்றும் IC வாகன உற்பத்தித் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளது. இந்த காந்தங்கள் எலக்ட்ரிக் வாகன மோட்டார்கள் மற்றும் பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம் போன்ற வாகனத்தின் பெரும்பாலான உதிரிபாகங்களுக்கு முக்கிய தேவையாக உள்ளது.
எச்சரிக்கை மணி: சீனா விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடு காரணமாக, மே மாத இறுதிக்குள் வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களிடம் இந்த சிறப்பு நியோடைமியம் காந்த இருப்பு தீர்ந்துவிடும் என இந்திய சந்தையில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு உள்ளது.
சீனா ஆதிக்கம்: உலகளவில் நியோடைமியம் காந்தங்களின் உற்பத்தி மற்றும் பிராசசிங் திறனில் 90 சதவீதத்தை சீனா கட்டுப்படுத்துகிறது. இந்த காந்தங்கள் எலக்ட்ரிக் வாகன மோட்டார்கள் மட்டுமல்லாமல், பலதரப்பட்ட எலக்ட்ரானிக்ஸ், கிளீன் எனர்ஜி, ஹோம் அப்லையன்ஸ் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது ஒவ்வொரு நாட்டின் உற்பத்தி துறையிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
உத்தரவில் குழப்பம்: சீனாவின் இந்தக் கட்டுப்பாடுகள் முதலில் உயர்-திறன் காந்தங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது என்றாலும், குறைந்த-திறன் காந்தங்களின் ஏற்றுமதியும் புதிய விதிமுறைகள் குறித்த குழப்பத்தால் தடைபட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஜூன் மாதம் முதல் நியோடைமியம் காந்தம் இல்லாமல் உற்பத்தி முடங்கப்போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது.
சீனாவை விட்டா வேற ஆளில்லை: இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனத் துறை மொத்தமும் இந்த நியோடைமியம் காந்தங்களுக்காக முற்றிலும் சீனாவை நம்பியே இயங்கி வருகிறது. இந்த ஒற்றை புள்ளி தோல்வி (single point of failure) குறித்து பஜாஜ் ஆட்டோவின் தலைவர் ராஜீவ் பஜாஜ்-ம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் பஜாஜ் பரபர பேச்சு: "பல லட்சம் கோடிகளை செலவழித்து நாம் உருவாக்கிய ஈவி துறை இந்த ஒற்றை புள்ளி தோல்வியால், பெரும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இதோடு தற்போது சீனாவிடம் இருந்து வாங்கும் Neodymium magnets-க்கு ஏற்றுமதி கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இழப்புகளைக் குறைத்து, அபாயங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். இது தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், செய்யாமல் இருப்பது மோசமான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்" என அவர் ஒரு சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

இந்திய அரசு நடவடிக்கை: உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், இந்த நெருக்கடி வாகன உற்பத்தியை முற்றிலும் முடக்கிவிடும் என இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மத்திய அரசை எச்சரித்துள்ளது.
இந்த நெருக்கடியை சரி செய்ய, இந்திய அரசு சீனாவிடம் இருந்து நியோடைமியம் காந்தங்களை பெறவும், பிற முக்கியமான அரிய உலோகம் சார்ந்த பொருட்களை பெற சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதற்கு தயாராகியுள்ளதை உறுதி செய்யும் சான்றிதழ்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) சுமார் 30 சான்றிதழ்களை வழங்கியுள்ளதாகவும், இந்த காந்தங்கள் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கோ அல்லது அமெரிக்காவிற்கு ஏற்றுமதிக்கோ பயன்படுத்தப்படாது என இந்திய தரப்பில், சீனாவுக்கு உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 சான்றிதழ்கள் என்றால் ஒரு ஷிப்மென்ட்-க்கு ஒரு சான்றிதழ் கணக்கு.
இதன் விளைவாக, சீனாவிலிருந்து காந்தங்களின் இறக்குமதி மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இது தற்காலிக நிவாரணமாகவே கருதப்படுகிறது, மேலும் நீண்டகால தீர்வுகளுக்காக இந்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என SIAM வலியுறுத்தியுள்ளது.
இழப்பு: இந்தியா தொழிற்துறையில் ஆட்டோமொபைல் மிகவும் முக்கியமானது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை கொண்டுள்ள துறை. இத்துறை முடங்கினால் கார் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்குவது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழக்க நேரிடும். இதனால் இந்தியாவுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications