அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது கடுமையான போரை தொடங்கின. இந்தப் போர் ஒரு மாத காலத்திற்கு மேலாக நீடிக்கிறது. ஈரான் இந்த போரில் தங்களுடைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட பல முக்கியமான தலைவர்களை இழந்திருக்கிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கக்கூடிய ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஏற்றி வரக்கூடிய கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்து சேர முடியவில்லை. இது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பெருமளவு உயர செய்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. இலங்கை ,பாகிஸ்தானில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து கப்பல்களும் பாதுகாப்பாக சென்று வரக்கூடிய வகையில் ஈரான் ஹார்முஸ் ஜல சந்தியை திறக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார்.
இன்று நள்ளிரவுடன் அந்த காலக்கெடு முடிகிறது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும் டிரம்ப், ஒருநாள் இரவிலேயே ஈரானை நாங்கள் அழித்து விடுவோர்ம், அது செவ்வாய் கிழமை இரவாகவே கூட இருக்கலாம் என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தாக வேண்டும் இல்லை என்றால் ஈரான் நரகத்திற்கு சென்று விடும் என டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்.

முதலில் ஈரான் நாட்டு மின் கட்டமைப்புகள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்திய அவர் தற்போது ஒட்டுமொத்த நாட்டையே அழிப்போம் என கூறியிருக்கிறார். ஆனால் ஈரான் நாட்டு ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படை ஹார்முஸ் ஜலசந்தி இதற்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பாது நிச்சயம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதனை பயன்படுத்த முடியாது சூழல் தான் இருக்கும் எனக்கு கூறி இருக்கிறது.
டிரம்ப் விதித்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு என்ற காலக்கெடு நெருங்கி வருவதால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. நேற்றைய தினம் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு வரைவு திட்டத்தை தயாரித்ததாக தகவல் வெளியானது. இதன்படி 45 நாட்கள் போரை நிறுத்திவிட்டு நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க அதில் முன்மொழியப்பட்டது. ஆனால் ஈரான் தரப்பு அதனை நிராகரித்து விட்டதாம்.
தங்களுக்கு நிரந்தர முடிவு தான் வேண்டும் என ஈரான் தரப்பு கூறியிருப்பதால் அந்த முயற்சியும் தோற்றுவுட்டது. இதற்கிடையே நாளை தினம் டிரம்ப் ஈரான் மீது எத்தகைய தாக்குதலை நடத்துவார், தரை வழி தாக்குதலும் தொடங்க போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டது எப்படி என்பதை விவரித்தார்.
அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய ஆபத்துக்கு மத்தியிலும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அமெரிக்க போர் விமானத்தில் இருந்த விமானியை மீட்பது தொடர்பான தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அரசாங்கத்திலேயே யாரோ ஒருவர் அந்த தகவலை ஊடகங்களுக்கும் பகிர்ந்து இருக்கிறார். அந்த கருப்பு ஆட்டின் செயலால் குறிப்பிட்ட அந்த விமானியை மீட்பது இன்னும் கடினமானதாக மாறியது எனக் கூறியிருக்கும் டிரம்ப், அரசின் இந்த ரகசிய தகவலை வெளியிட்டது யார் எந்த ஊடகத்திற்கு அந்த தகவல் முதலில் சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த நபர் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications